பழிக்கு பழியா?… பட்டப்பகலில் நடந்த கொடூரம்… நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு திரும்பிய வாலிபர்… பெட்ரோல் பங்க்கில் வெட்டிப் படுகொலை… செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவிலைச் சேர்ந்த வீரா (எ) வீர முத்துகிருஷ்ணன் (26) என்பவர் பாஸ்ட் புட் கடை நடத்தி வந்தார். பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆகாஷ் என்பவரைக் கொலை செய்து புதைத்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாவார். இன்று நீதிமன்றத்தில் கையெழுத்திட்டுவிட்டு, தனது நண்பர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

செங்கல்பட்டு பைபாஸ், பழவேலி அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் வாகனத்திற்குப் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரைச் சுற்றி வளைத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் அவரைச் சரமாரியாக வெட்டிவிட்டு அக்கூட்டம் தப்பியோடியது. இதில் பலத்த காயமடைந்த வீர முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீஸார், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆகாஷ் கொலையினைக் பழிவாங்கும் நோக்கில், நீதிமன்ற வளாகத்தில் இருந்தே திட்டமிட்டுப் பின்தொடர்ந்து வந்து இக்கொலை செய்யப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருடன் இருந்த இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், தப்பியோடிய 6 பேரையும் தனிப்படை அமைத்து போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Swetha

Recent Posts

மரத்தின் மீது மோதி கவிழ்ந்த பள்ளி வேன்…. அலறி துடித்த பள்ளி மாணவர்கள்…. நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜய் நகர் பகுதியில், பள்ளிச் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த பள்ளி வேன்…

42 minutes ago

“உங்க ஸ்பேஸ் டெக்னாலஜியை பாருங்க…” நடுரோட்டில் மெகா பள்ளம்… பைக்குடன் பாய்ந்த டெலிவரி பாய்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மவ் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் காம்பவுண்ட் சாலையில், உணவுகளை டெலிவரி செய்வதற்காக வாலிபர்…

56 minutes ago

“அந்தரங்க உறுப்புகளை காட்டு…” 10 ஆண்டுகளாக 4 வயது சிறுமியை சீரழித்த வளர்ப்பு தந்தை… தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பகீர் பின்னணி..!!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆட்ரி ஹெகன் என்ற பெண்மணி, கடந்த 2013-ஆம் ஆண்டு ஆன்லைன் டேட்டிங் தளம் வழியாக 60 வயதான…

1 மணத்தியாலம் ago