ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ள சின்னமாயாகுளம் காட்டுப் பகுதியில், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கோபி மற்றும் கணேசன் (எ) ரியாசுதீன் ஆகிய இருவர் மூக்கு மற்றும் கண்களில் ரத்தம் வடிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஏர்வாடி காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஆகியோர் நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகே காலி மது பாட்டில்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் சிதறிக் கிடந்தன. இதனால் இருவரும் அளவுக்கு அதிகமாக நச்சுத்தன்மை கொண்ட மதுவைக் குடித்து உயிரிழந்தனரா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் மதுவில் நஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்தனரா என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உண்மைக்காரணம் தெரியவரும் என்றும் எஸ்பி தெரிவித்துள்ளார். மேலும், முன்னெச்சரிக்கையாக ஏர்வாடி, கீழக்கரை, மாயாகுளம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பம்பாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான பச்சைமுத்து. இவர் பிரபல டேட்டிங் செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில்,…
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சி கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதான சண்முகநாதன். இவரது மனைவி…
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாகர் பகுதியைச் சேர்ந்தவர் 75 வயதான ஓம்குமார். இவரது மனைவி 70 வயதான சத்யவதி. இந்த…
கர்நாடக மாநிலம் பெங்களூரு அக்ரஹார தாசரஹள்ளி பகுதியில் வசித்து வந்த பூஜா மற்றும் ஓம்பிரகாஷ் ஜோடி, கடந்த 8 மாதங்களுக்கு…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜய் நகர் பகுதியில், பள்ளிச் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த பள்ளி வேன்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மவ் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் காம்பவுண்ட் சாலையில், உணவுகளை டெலிவரி செய்வதற்காக வாலிபர்…