கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது எவ்வித சமரசமுமின்றி 24 மணி நேரத்திற்குள் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். சிட்கோ தொழிற்பேட்டையில் அமைச்சர் மதன்ராஜுடன் இணைந்து பங்கேற்ற இந்நிகழ்வில் பேசிய அவர், தவறுகளை இந்த அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதேவேளையில், சில இடங்களில் ஊழியர்களை வீடியோ எடுத்து மிரட்டும் சம்பவங்களும் நடப்பதாகக் குறிப்பிட்ட அவர், வரப்பெறும் புகார்களின் உண்மைத்தன்மை ஆராயப்பட்டு, தவறு உறுதியானால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை பாயும் என எச்சரித்தார்.
தன் மீதான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மதுபான ஆலை உரிமையாளர்கள், இலாகாவை மாற்ற அரசுக்கு அழுத்தம் தருவதாக எழும் தகவல்கள் குறித்து வினவியபோது, “பொதுவாக நன்மைகள் செய்யும்போது இதுபோன்ற அழுத்தங்கள் வருவது இயல்புதான்; அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும், அதைச் சந்திப்பதற்குத் தயார்” என அழுத்தமாகப் பதிலளித்தார். தொழில்முனைவோர் சந்திப்பாகத் தொடங்கிய இந்நிகழ்வு, அமைச்சரின் இந்த அதிரடி மற்றும் துணிச்சலான பதில்களால் தற்போதைய அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…
குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…