கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக நீடித்து வருவதால், புதுச்சேரியில் திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கத்திரி வெயில் முடிவடைந்த பின்னரும் வெயிலின் கொடுமை குறையாததால், மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மற்றும் மாஹே ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 4-ஆம் தேதியே திறக்கப்பட உள்ளன. தமிழகத்திலும் இதே காரணத்திற்காகப் பள்ளிகள் திறப்பு ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி அரசும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த நீட்டிப்பு மற்றும் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில்…
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நேரில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள நெடுமங்காடு பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித் தொடர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த…
அகமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர், திருச்சி,…