“நடந்ததை வெளியில சொன்னா உனக்கு தான் அசிங்கம்”… 14 வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று ஆட்டோ ஓட்டுனர் செய்த கொடூரம்… சென்னையில் நடந்த பயங்கரம்…!

Spread the love

சென்னையில் பள்ளி சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று ஆட்டோ ஓட்டுனர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராய நகர் சவுத் போக் சாலையில் வசித்து வரும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் நந்தனத்தில் உள்ள தன்னுடைய சித்தப்பா வீட்டுக்கு சென்று விளையாடிவிட்டு தன்னுடைய வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது நந்தனத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் நீலகண்டன் (25) சிறுமியை வலுக்கட்டாயமாக கையைப் பிடித்து தனது வீட்டுக்குள் இழுத்துச் சென்று காதலிப்பதாக கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 12 ஆம் வகுப்பு முடித்ததும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி சிறுமியை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமி அழுத போது நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் உனக்கு தான் அசிங்கம் என்று சொல்லி சிறுமியை மிரட்டி வெளியே அனுப்பியுள்ளார். அதன் பிறகு சிறுமி தனது தாயாரிடம் இது பற்றி தெரிவித்த நிலையில் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுனர் நீலகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமுறைவாக உள்ள அவரையும் தேடிவரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

விஜய் செய்த வரலாற்றுத் தவறு?… கடைசி நேரத்தில் தவெக-வுக்கு காத்திருந்த அதிர்ச்சி… மொத்தமாக ஸ்கோர் செய்த ஸ்டாலின்…!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை களம் அனல் பறக்கிறது. குறிப்பாக…

6 minutes ago

“வீட்டில் ரத்தக் கறை.. சுடுகாட்டில் உடல்”…. கணவனைக் கொன்று சுடுகாட்டில் புதைத்த மனைவி…. கள்ளக்காதல் ஜோடிக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி…!

திருமணம் தாண்டிய சட்டவிரோத உறவுகள் பெரும்பாலும் சமூகச் சீரழிவிற்கும், கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன என்பதற்கு ஓசூரில் நடந்த இந்தச் சம்பவம்…

18 minutes ago

ஹார்முஸ் நீரிணையில் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்… சிம்ம சொப்பனமாக இருக்கும் 5 விஷயம்…. நாளை விடியப்போவது யாருக்கு..?

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…

27 minutes ago

உலக நாடுகளை நடுங்க வைக்கும் ‘ஹார்முஸ் அதிர்ச்சி’… இந்தியப் பொருளாதாரத்தைத் தலைகீழாக மாற்றப்போகும் அந்த 21 மைல் கடல் பாதை….!

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…

33 minutes ago

பகீர்.! டாக்டர் இல்ல.. நர்ஸ் இல்ல… அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு தையல் போட்ட செக்யூரிட்டி… கொந்தளிக்க வைக்கும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…

52 minutes ago

“என்னை காப்பாத்துங்க” கத்தியும் யாருமே உதவிக்கு வரல..! கண்ணெதிரே துடிதுடித்து இறந்த உயிர்… 33 வயது வாலிபர் நீரில் மூழ்கும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…

56 minutes ago