Categories: சினிமா

‘என் கதையில் சசிகுமார்தான் கமர்ஷியல் மசாலா தூவினான்’… பல வருடங்களுக்கு இயக்குனர் அமீர் பகிர்ந்த தகவல்!

Spread the love

பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்டான சேது திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க முதலில் முரளிதான் ஒப்பந்தம் ஆனாராம். அப்போது அவர் பிஸியான நடிகராக இருந்தும் அந்த படத்துக்காக மொட்டை அடிக்க துணிச்சலாக சம்மதித்தாராம். ஆனால் அது நடக்காததால் அதன் பின்னர் விக்ரம்மை வைத்து சேது படத்தை எடுத்து பல போராட்டங்களுக்குப் பிறகு படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அந்த படத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அரிய ரத்தினங்கள் என்று பாலா, அமீர், விக்ரம் மற்றும் சசிகுமார் ஆகியோர்களை சொல்லலாம். அந்த படத்தில் இருந்துதான் அவர்களெல்லாம் புகழ் வெளிச்சம் பெற்று தங்களுடைய அடுத்தடுத்த படைப்புகளைக் கொடுத்தார்கள்.

இதில் இயக்குனர் அமீர் கொடுத்த கலையுச்சம் பெற்ற படைப்பு என்று பருத்திவீரன் படத்தை சொல்லலாம். அந்த படத்தில் கார்த்தியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி அவருக்கு 100 படங்களில் நடித்த கதாநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பைக் கிடைக்கவைத்தார். அந்த படைப்பின் பாதியைத் தொடுமளவுக்குக் கூட அமீரால் தன்னுடைய அடுத்த படத்தைக் கொடுக்க முடியவில்லை.

அமீர் பருத்திவீரன் படத்துக்கு முன்னர் இயக்கிய படம் ‘ராம்’. அந்த படத்தில் ஜீவா ஒரு பள்ளி மாணவனாக நடித்திருந்தார். அந்த படம் சுமாரான வணிக வெற்றியைப் பெற்றாலும் இயக்குனர் அமீருக்கும், நடிகர் ஜீவாவுக்கும் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் எல்லாம் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றது.

இந்நிலையில் ராம் படத்துக்காக தான் உருவாக்கியக் கதையில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து அமீர் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “நான் ராம் படம் கதை எழுதிய போது  அந்த கதையின் கதாநாயகனுக்கு 13 வயசு என்றுதான் வைத்திருந்தேன். ஆனால் என்னிடம் இணை இயக்குனராக இருந்த சசிதான் அண்ணன் கதாநாயகனுக்கு ஒரு பதினாறு வயசுன்னு மாத்துங்க என்றான். அப்பதான் அவனுக்கு ஒரு ஹீரோயின் போட்டு காதல் எல்லாம் வைக்க முடியும். படமும் கொஞ்சம் கமர்ஷியலாக மாறும் என்றான். அதனால்தான் கதையில் சில மாற்றங்கள் செய்தோம்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

7 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

7 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

7 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

7 மணத்தியாலங்கள் ago