தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கிரி, கலகலப்பு என ஏராளமான படங்கள் கமர்ஷியலாக பெருவெற்றி பெற்றுள்ளன. முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுந்தர் சி காமெடி, கிளாமர், ஆக்ஷன் என கலந்து கட்டி மசாலா படமாக எடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.
சுந்தர் சி படத்துக்கு சென்றால் வாய்விட்டு சிரித்து ரசித்துவிட்டு வரலாம் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதற்கேற்றார் போல சுந்தர் சி படங்கள் சுமாராக் இருந்தாலும் காமெடி கட்டாயம் ஹிட்டாகிவிடும். அதே போல சொன்ன பட்ஜெட்டில் சொன்ன தேதிக்குள் படத்தை எடுத்துக் கொடுத்துவிடுவார் என்ற நல்ல பெயரும் சுந்தர் சி க்கு உண்டு. அதே போல ஷூட்டிங்கில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை மாற்று யோசனை செய்து சமாளித்துவிடுவார் என்றும் அவரைப் பற்றி சொல்லப்படுவதுண்டு.
அவரது படங்கள் எப்போதுமே மினிமம் கியாரண்டி என்பதற்கு சமீபத்தில் ரிலீஸாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் ‘மத கஜ ராஜா’ திரைப்படமே உதாரணம். இந்த படம் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகி யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றிப் படமாகியுள்ளது. பொங்கலுக்கு ரிலீஸான பல படங்களில் அதிகம் வசூல் செய்த படமாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் சக்ஸஸ் மீட்டில் பேசிய இயக்குனர் சுந்தர் சி “என் படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றிகளைப் பெறும். மிகப்பெரிய அளவில் வசூல் செய்யும். மக்கள் அதை ரசித்துக் கொண்டாடுவார்கள். ஆனால் எனக்கு மட்டும் மனதில் ஒன்று தோன்றிக் கொண்டே இருக்கும். எப்போது நல்ல இயக்குனர்கள் என்று ஒரு பட்டியலைப் போட்டாலும் அதில் என் பெயர் இடம்பெறாது. என்னை நல்ல இயக்குனர் என்று சொல்ல மாட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…
தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…
பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…