Categories: சினிமா

சூரி ஹீரோவானது எல்லார்க்கும் தெரியும்.. ஆனா கதாசிரியர் ஆனது தெரியுமா?…

Spread the love

தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை நடிகராக நடித்து அதன் பின்னர் வெண்னிலா கபடிக்குழு படம் மூலமாக பரோட்டா சூரியாக அறியப்பட்டு அதன் பின்னர் காமெடி நடிகராக வளர்ந்து வந்தார் சூரி. இவரது இயற்பெயர் ராமலக்ஷ்மணன் முத்துசாமி என்பதாகும். 1998ல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் சென்னைக்கு வந்தார் சூரி. ஆனால் அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னணியில் கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார் சூரி.

2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சூரி. இந்த திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் 50 பரோட்டாக்களை சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டு அந்த காமெடி மிகவும் பிரபலமானதால் இவரை பரோட்டா சூரி என்று மக்கள் அழைக்க ஆரம்பித்தனர்.

அதற்குப் பிறகு சுந்தர பாண்டியன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் ஜில்லா வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற திரைப்படங்களில் ஹீரோவுக்கு நண்பனாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். கடந்த ஆண்டு வெளியான விடுதலை பாகம் ஒன்று திரைப்படத்தின் மூலம் வெற்றிமாறன் சூரியை நாயகனாக அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

அதன் பின்னர் அவர் கதாநாயகனாக நடித்த ‘கருடன்’ மற்றும் ‘கொட்டுக்காளி’ ஆகிய திரைப்படங்களும் கவனம் பெற அவரை தமிழ் சினிமா ரசிகர்கள் ஹீரோவாக ஏற்றுக்கொண்டார்கள். இதையடுத்து அவர் தொடர்ந்து ஹீரோவாக சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சூரி கதாசிரியராகவும் உருவெடுத்துள்ளார்.

சூரி நடித்த கருடன் படத்தின் மூலக்கதைதான் அவர்தான் சொன்னார் என இயக்குனர் துரை செந்தில்குமார் கூறியிருந்தார்.  அதை அவர் வாழ்க்கையில் சந்தித்த ஒரு சம்பவத்தில் இருந்து எடுத்து சொன்னதாக சொல்லப்படுகிறது. அதுபோல இப்போது அவர் நடிக்கும் மாமன் படத்தின் கதையையும் சூரிதான் சொன்னாராம். மேலும் தன்னுடைய அப்பாவின் பயோபிக்கையும் விரைவில் எடுக்கவுள்ளதாக சூரி அறிவித்துள்ளார். இப்படி வரிசையாக தன்னுடைய படங்களின் கதைகளில் சூரி ஈடுபாடு காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

அட கொடுமையே… வேலையை விட்டு தூக்கியதால் ஆத்திரம்… சலூன் உரிமையாளரை கொடூரமாக தாக்கிய கும்பல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV காட்சி…!

அவளஹள்ளியில் உள்ள ஒரு யூனிசெக்ஸ் சலூன் உரிமையாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அறிக்கைகளின்படி,…

19 minutes ago

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

9 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

9 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

9 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

9 மணத்தியாலங்கள் ago