தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராகவும் நடிகராகவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக வரும் வருகிறார். அவர் தான் இயக்கி நடித்த புதிய பாதை என்ற வெற்றிப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்தார். அதற்கு முன்னர் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
புதிய பாதை படத்தில் அப்போது முன்னணி நடிகையாக இருந்த சீதாவைக் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அந்த படத்தின் உருவாக்கத்தின் போது இருவரும் காதலில் விழுந்தனர். அதன் பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு நடிப்பைக் குறைத்துக் கொண்டார் சீதா. ஆனால் பார்த்திபன் நடிகராகவும் இயக்குனராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
அவரின் இந்த பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார் பார்த்திப்ன. நடிகராக சம்பாதிக்கும் பணத்தை இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் முதலீடு செய்து வித்தியாசமான படங்களை இயக்கி கையை சுட்டுக் கொள்கிறார். ஆனாலும் தொடர்ந்து வித்தியாசமான(?) படங்களை தமிழ் சினிமாவுக்குக் கொடுத்து வருகிறார்.
பார்த்திபன் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமான முதல் படம் ‘புதிய பாதை’. இந்த படத்தில் அவர் கமிட்டானபோது படத்துக்கு இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என தயாரிப்பாளரிடம் பிடிவாதமாக இருந்தாராம். ஆனால் பட்ஜெட் காரணமாக இளையராஜாவைத் தவிர்த்த தயாரிப்பாளர் சந்திரபோஸை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த படம் ஹிட்டாகியுள்ளது.
அதையடுத்து அவர் இயக்கிய பொண்டாட்டி தேவை படத்துக்கு இளையராஜாவை எப்படியோ இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் படம் தோல்வி. இதுபற்றி தயாரிப்பாளர் பார்த்திபன் ‘இளையராஜா இல்லாத உன் படம் ஹிட்டானது. இளையராஜா இருந்த உன் அடுத்த படம் தோல்வி அடைந்துள்ளது’ எனக் கூறியுள்ளார்.
அவருக்கு தன் ஸ்டைலில் பதிலளித்த பார்த்திபன் “முதல் படத்தில் இளையராஜா இசையிருந்தால் இன்னும் பெரிய ஹிட் ஆகியிருக்கும். இரண்டாவது படத்தில் இளையராஜா இருந்தே படம் தோல்வியடைந்துள்ளது. அவர் இல்லை என்றால் அந்த படம் என்ன ஆகியிருக்கும்?” எனப் பதிலளித்தாராம்.
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…
திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…
ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…