FLASH NEWS: கார் கோர விபத்து… 8 பேர் பலியான சோகம்… கோயிலுக்குப் போன இடத்தில் நேர்ந்த பெரும் சோகம்…!

Spread the love

ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப் பொலிரோ காரில் சென்ற பக்தர்கள், எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகினர். இந்த பயங்கர மோதலில் சம்பவ இடத்திலேயே 5 பேர் துடிதுடித்து உயிரிழந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. கோயில் வழிபாட்டிற்காகச் சென்ற ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை உருவாக்கியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“பூவைச் செடியில் இருந்து கிள்ளினால் மட்டும் வாடாது”பாக்யராஜை அந்த வார்த்தை சொல்லி… மேடையில் பாரதிராஜா கலங்கிய நெகிழ்ச்சி வீடியோ வைரல்…!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, அவரது குருவான புகழ்பெற்ற…

3 minutes ago

“பெண் பிள்ளைகளைப் பெக்காதீங்க…” வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கு DNA டெஸ்ட் கேட்ட கணவன்… கொடுமை தாங்காமல் கர்ப்பிணி தற்கொலை… வேதனையில் கதறும் தாய்..!!

தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் அல்லாதுர்க்கைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும், சுஷ்மிதா என்பவருக்கும் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்…

11 minutes ago

அடக்கடவுளே..! நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி: பைக்கில் சென்றவர் மீது திடீரென முறிந்து விழுந்த மரக்கிளை… உயிருக்கு போராடும் அவலம்..!!

பெங்களூருவின் ராஜாஜிநகர் ராம் மந்திர் சாலை பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 53 வயது நபர் மீது காய்ந்த…

16 minutes ago

“மகன் திமுக” இதேபோல 2 வருஷம் கழிச்சி… அதை சொல்லி தவெகவில் இருந்து வெளியேருவாங்க… முன்னாள் மதிமுக பிரமுகர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சாடல்..!!

மதிமுக திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ள அரசியல் சூழலில் , முன்னாள் மதிமுக பிரமுகர் கே.…

26 minutes ago

FLASH: நாளை மதியம் 1.30 மணிக்கு பாக்யராஜ் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு..!!

மறைந்த பிரபல நடிகரும், இயக்குநருமான கே. பாக்யராஜின் உடல், நாளை (ஜூன் 28) மதியம் 1.30 மணி அளவில் சென்னை…

32 minutes ago

செந்தில்பாலாஜிக்கு விஜய் வைத்த மெகா செக்… அதிரடி முடிவால் அலறும் திமுக… தவெக அரசின் அடுத்த மாஸ்டர் பிளான்…!

டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு எதிராக முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவைத்…

50 minutes ago