“அன்று ஜெயலலிதாவிடம் அப்படி… இன்று ஏன் இப்படி?”… விஜய்யின் கடந்த காலத்தை தோண்டி எடுத்த சரத்குமார்….!

Spread the love

கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சரத்குமார், நடிகர் விஜய் மற்றும் அவரது திரைப்பட வெளியீட்டில் நிலவும் சிக்கல்கள் குறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். விஜய்யின் படங்களுக்கு தணிக்கை வாரியம் மூலம் நெருக்கடி அளிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்களுக்குப் பதிலளித்த அவர், இது போன்ற சிக்கல்கள் விஜய்க்குப் புதியதல்ல என்றும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலேயே தனது பட ரிலீஸுக்காக விஜய் கைகட்டி நின்று காத்திருந்ததை நினைவு கூர்ந்தார்.

திரைப்படங்களுக்கு தணிக்கை வாரியம் முட்டுக்கட்டை போடுவது இது முதல் முறையல்ல என்றும், ‘தக் லைஃப்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ளதால், இதனை விஜய்க்கு எதிரான அரசியல் நெருக்கடியாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய சரத்குமார், ஒரு படம் குறித்த நேரத்தில் வெளியாக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும் நிலையில், தான் நடித்த ‘அடங்காதே’ திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருப்பதைக் குறிப்பிட்டு, அதற்காக யாரும் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

அனைத்தும் அரசியல் ரீதியாகவே நடப்பதாகக் கருதுவதை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அவர், திரையுலகில் நிலவும் இத்தகைய நடைமுறைச் சிக்கல்களை அரசியலோடு தொடர்புபடுத்துவது முறையல்ல எனத் தெரிவித்தார். விஜய்யின் அரசியல் வருகை காரணமாக அவருக்குத் திட்டமிட்டு அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுவதையும் அவர் இதன் மூலம் மறுத்துள்ளார்.

Nanthini

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

8 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

9 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

9 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

9 மணத்தியாலங்கள் ago