இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளதால், தற்போது வங்கிகளில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7.20 சதவீதமாகக் குறைந்துள்ளது. உதாரணமாக, பேங்க் ஆஃப் பரோடா போன்ற வங்கிகளில் 50 லட்சம் ரூபாய் கடன் பெற விரும்பினால், 30 ஆண்டுகால தவணைக்குக் குறைந்தபட்சம் 68,000 ரூபாய் மாதச் சம்பளம் இருக்க வேண்டும். இக்காலக்கட்டத்தில் மாதந்தோறும் சுமார் 34,000 ரூபாய் EMI செலுத்த வேண்டியிருக்கும். கடனைத் திருப்பி செலுத்தும் காலத்தை குறைக்க விரும்பினால், அதற்கேற்ப மாத சம்பளத் தகுதியும், தவணை தொகையும் மாறுபடும்.
20 அல்லது 25 ஆண்டுகளில் கடனை அடைக்க திட்டமிட்டால், மாத சம்பளம் 72,000 முதல் 79,000 ரூபாய் வரை இருக்க வேண்டியது அவசியமாகும். மேலும், விண்ணப்பதாரருக்கு வேறு எந்தக் கடன் நிலுவைகளும் இருக்கக்கூடாது என்பதும், CIBIL எனப்படும் கிரெடிட் ஸ்கோர் மிகச் சிறப்பாக இருக்க வேண்டியதும் முக்கிய நிபந்தனையாகும். வட்டி விகிதக் குறைப்பால் வீட்டுக் கடன் வாங்குவது எளிதாகியுள்ள நிலையில், தங்களது வருமானத்திற்கு ஏற்ப கடன் காலத்தைத் தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும் என நிதி நிபுணர்கள் கருதுகின்றனர்.
நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தலைமைச் செயல் அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகளின் வாட்ஸ்அப் சுயவிவரப் படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி,…
மும்பை சாந்தீவலி பகுதியில் பெய்த கனமழையின் போது, திறந்திருந்த பாதாள சாக்கடை மேன்ஹோலில் தவறி விழுந்து அஸ்லாம் இசாக் ஷேக்…
தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை…
தமிழக அரசியல் களம் எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு துருவங்களை மையமாகக்கொண்டே சுழன்று வந்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,…
நாக்பூரைச் சேர்ந்த ராஜேந்திர தெம்ரே என்ற ஆட்டோ ஓட்டுநர், தமக்குத் தற்செயலாகக் கிடைத்த கூடுதல் பணத்தைக் கொண்டு செய்த நற்செயல்…
சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்ற அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக மருந்துக்கடைகளுக்கும் மருத்துவமனைக்கும் ஓடுவதைத் தவிர்த்து, நம் வீட்டு…