#image_title
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என இரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் மறைந்த பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தை AI தொழில்நுட்பம் மூலம் கோட் திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளனர். இதனால் விஜய் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். நேற்று விஜய் வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி, ஆகியோர் விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று நன்றி தெரிவித்துள்ளார்.
விஜய் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர்களை தூவி ஆசீர்வாதம் பெறுவது, பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்களுடன் இணைந்து பேசிக் கொண்டிருப்பது உள்ளிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. நேற்றைய தினம் விஜயகாந்த் வீட்டில் வீட்டில் அவர்கள் என்னென்ன பேசியிருப்பார்கள் என பல்வேறு செய்திகள் இணையத்தில் உலா வருகிறது. அரசியல் பற்றி பேசி இருப்பார்கள், கூட்டணி பற்றி பேசி இருப்பார்கள் என ஏராளமான செய்திகள் உலா வருகிறது.
இந்த நிலையில் வலைப்பேச்சு யூடியூப் சேனல் அந்தணன் கூறியதாவது, விஜய் விஜயகாந்தின் இரு மகன்களுடனும் மிகுந்த அக்கறையுடன் பேசி கொண்டிருந்தாராம். விஜயின் 69-ஆவது படத்தில் விஜயகாந்த் மகனான சண்முக பாண்டியனை நடிக்க வைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் விஜயின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் செந்தூரப்பாண்டி. அதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் தான் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். தனது நன்றியை மறவாது சண்முக பாண்டியனை தனது 69-ஆவது படத்தில் விஜய் நடிக்க வைப்பது குறித்தும் பேசி இருக்க வாய்ப்பு உள்ளது என அந்தணன் கூறியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…