இனி செல்போன் தொலைந்தாலும் கவலை இல்லை.. இந்த ஒரு APP இருந்தா போதும்.. உங்க போன் உங்களுக்கே கிடைக்கும்..!

Spread the love

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் தொடங்கி பணப்பரிவர்த்தனை வரை அனைத்திற்கும் செல்போன் என்பதை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இப்படி நம் அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த செல்போன் எதிர்பாராத விதமாக தொலைந்து போவதற்கோ அல்லது திருடு போவதற்கோ அதிகமான வாய்ப்புகள் உள்ளது. அந்த சமயத்தில் பலரும் செல்போன் தொலைந்து விட்டால் அதனை கண்டுபிடிக்க முடியாது என அப்படியே விட்டுவிடுவார்கள்.

ஆனால் மத்திய அரசின் செயலி மூலமாக இதுவரை சுமார் 5 லட்சம் தொலைந்து போன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசின் தொலைதொடர்பு அமைச்சகம் சஞ்சார் சாத்தி (sanchar saathi) என்ற இணையதளம் மற்றும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. உங்கள் செல்போன் தொலைந்து விட்டால் இந்த இணையதளம் அல்லது செயலியில் இது குறித்து புகார் அளித்தால் அந்த செல்போனை வேறு யாரும் பயன்படுத்த முடியாத வகையில் செயலிழக்க செய்ய முடியும்.

பிறகு செல்போனை டிரேஸ் செய்து கண்டறிந்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம். இதில் உங்களுடைய செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். மேலும் உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்ட் இணைப்பு உள்ளது என்பதையும் கண்டறிய முடியும். நீங்கள் அங்கீகரிக்காத சிம் கார்டு உங்களுடைய பெயரில் வாங்கப்பட்டிருந்தால் அது குறித்து புகார் அளித்து செயல் இழக்க செய்ய முடியும்.

மோசடிக்காரர்கள் பெரும்பாலும் போலியான ஆவணங்களை உருவாக்கி அடுத்தவர்களின் பெயரில் சிம்கார்டு வாங்கி அதன் மூலம் குற்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேசமயம் மோசடி செய்யும் நோக்கத்தில் வரும் சந்தேகத்திற்கு இடமான செல்போன் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், whatsapp அழைப்பு குறுஞ்செய்தி தொடர்பாகவும் இதில் புகார் அளிக்கலாம். இந்த செயலி மூலம் இதுவரை ஒரு கோடிக்கு அதிகமான அங்கீகரிக்கப்படாத மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி பெரிதும் உதவியாக இருக்கும் இடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது..

Nanthini

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

4 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

4 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

4 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

5 மணத்தியாலங்கள் ago