Connect with us

CINEMA

விஜய் என்ன பெரிய சூப்பர் ஸ்டாரா.. உண்மைய பேசுறதுல எனக்கு பயம் இல்ல.. மேடையில் வெளிப்படையாக பேசிய விஜயின் தந்தை SAC..

’துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘ராஜா’, ‘மனம் கொத்திப் பறவை’, ‘தீபாவளி’ உட்பட பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் எழில். இவர் கடந்த 2013-ம் ஆண்டு விமல், பிந்து மாதவி, சூரி உட்பட பலர் நடிப்பில் வெளியான தேசிங்கு ராஜா என்ற திரைப்படத்தை இயக்கினார். காமெடி படமாக உருவாகியிருந்த இப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 11வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார் எழில். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா கடந்த 27-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.

#image_title

   

இதில் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசிய பேச்சு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்போது இருக்கும் சில இயக்குநர்கள் பெரிய ஹீரோக்களை வைத்துப் படம் எடுத்து தாங்களும் பெரிய இயக்குநர்களாகி விடுகின்றனர் என்றும் கதை, திரைக்கதையை யாரும் மதிப்பதில்லை என சாடியுள்ளார்.

“என்னிடம் கதை சொல்பவர்களிடம் நான் குறை சொல்லமாட்டேன். சாதாரணமான பார்வையாளனாக இருந்து என் மனதில் இருக்கும் சந்தேகங்களையும், கேள்விகளையும் கேட்பேன். படம் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக இதைச் செய்வேன் எனக் கூறிய சந்திரசேகர், இப்போதெல்லாம் யாரும் கதை திரைக்கதைக்கு மரியாதைக் கொடுப்பதில்லை. ஒரு ஹீரோ கிடைத்தால் போதும் எப்படியும் ஒரு படத்தை எடுத்து வெற்றியடைந்து விடலாம். இப்போ இருக்க பார்வையாளர்களும் ஹீரோவுக்காகப் படம் பார்க்கப் பழகிவிட்டார்கள். படத்தின் கதை, திரைக்கதை பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை. ஹீரோவுக்காகப் படம் ஓடிவிடுகிறது. அதனால் அந்த இயக்குநரும் பெரிய இயக்குநாராக மாறிவிடுகிறார்கள் என கூறினார்.

#image_title

சமீபத்தில் ஒரு படம் பார்த்துவிட்டு அந்த இயக்குநருக்குக் கால் பண்ணிப் பேசினேன். படத்தின் முதல் பாதி சூப்பர் என்று பாராட்டிப் பேசினேன். இரண்டாம் பாதியில் சில குறைகள் இருக்கிறது என்றேன். பாராட்டிப் பேசியதைக் காது கொடுத்துக் கேட்டவர், குறைகளைச் சொல்ல ஆரம்பத்தவுடனே ‘சாப்பிட்டுட்டு இருக்கேன் சார். அப்புறமா கூப்பிடுறேன்’ என்று போனைக் கட் செய்துவிட்டார். அதன்பிறகு கூப்பிடவே இல்லை என குற்றம்சாட்டினார்.

#image_title

விஜய் நடிப்பில் வெளியான துள்ளாத மனம் துள்ளும் படத்தின் போது, கதையை கேட்ட எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் எழிலிடம் ஒரு கேள்வி கேட்டதாகவும், அதற்கு அவர் படம் மூலமே பதிலளித்ததாகவும் கூறியுள்ளார். இயக்குநரின் அந்தப் பக்குக்வதம் தான் அவரை வாழ்வில் மேம்படுத்தியதாகவும், அப்படம் வெளியான போது விஜய் ஒன்றும் சூப்பர் ஸ்டார் இல்லை எனவும், ஆனால் படத்தின் கதை திரைக்கதை அப்படத்தை வெற்றிப் படமாக மாற்றியதாகவும், அப்படம் வெளியாகி வெற்றியான பிறகு தான் மலையாளத்தில் விஜய்க்கு ரசிகர்கள் உண்டானதாகவும் தெரிவித்தார்.

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top