நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திய நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை அது கடுமையாக உலுக்கியுள்ளது. தேர்தலில் அடைந்த பின்னடைவால் அதிமுக வரலாற்றிலேயே இல்லாத வகையில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இந்தத் தொடர் தோல்விகள் கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது மூத்த நிர்வாகிகள் பலரும் தங்களது பகிரங்க அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினர். இதுவே தற்போதைய உட்கட்சி மோதலின் தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது.
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான 25 எம்.எல்.ஏ-க்கள் விருப்பம் தெரிவித்தனர். இதனால் அதிருப்தியடைந்த எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மூத்த நிர்வாகிகளின் மாவட்டச் செயலாளர் பதவிகளை அதிரடியாகப் பறித்தார். இந்த மோதலின் உச்சகட்டமாக 5 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். பின்னர் இருதரப்பிற்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும், பறிக்கப்பட்ட பதவிகள் உடனடியாகத் திருப்பித் தரப்படாமல் இழுபறியே நீடித்தது.
இந்தச் சூழலில், அதிருப்தியில் இருந்த நிர்வாகிகளைச் சமாதானப்படுத்த நினைத்த இபிஎஸ், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு ‘அமைப்புச் செயலாளர்’, ‘துணைப் பொதுச்செயலாளர்’ போன்ற புதிய பொறுப்புகளை வழங்கி உத்தரவிட்டார். ஆனால், வழங்கப்பட்ட புதிய பதவிகளுக்குக் கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரமோ அல்லது நிர்வாக பலமோ இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. அதிலும் குறிப்பாக, கட்சியின் முக்கிய முகமாக விளங்கிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படாதது, ஏற்கனவே கோபத்தில் இருந்த நிர்வாகிகளை மேலும் அதிர்ச்சி அடையச் செய்தது.
இந்நிலையில், புதிய பதவிகளைப் பெற்ற எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னை வந்து தன்னைச் சந்தித்து வாழ்த்துப் பெறுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கடந்த மூன்று நாட்களாகக் காத்திருந்தார். ஆனால், இபிஎஸ்ஸின் புதிய அறிவிப்புகள் கட்சிக்குள் எதிர்பார்த்த உற்சாகத்தை ஏற்படுத்தாததால், வேலுமணி அணியைச் சேர்ந்த பெரும்பாலான நிர்வாகிகள் அவரைச் சந்திக்காமல் முற்றிலும் புறக்கணித்தனர். இதனால் ஏமாற்றமடைந்த இபிஎஸ் நேற்று சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான சேலத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அதிமுகவின் இந்தத் தொடர் உட்கட்சி மோதல்கள் அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…
தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…
வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…
சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.…
பெங்களூரைச் சேர்ந்த அஞ்சலி என்ற மென்பொருள் பொறியாளர் , அங்கு தான் வசிப்பதற்காக ஒரு மாதத்திற்குச் செய்யும் ரூ 71,000…