தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு… விஜயை வீழ்த்த தயாராகும் மெகா கூட்டணி… சீமான் எடுத்த அந்த ஒரு முடிவு… கசிந்த ரகசிய தகவல்…!

Spread the love

தமிழ்நாடு அரசியலில் எப்போதும் இல்லாத ஒரு புதிய திருப்பமாக, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்பாசமுத்திரம் தொகுதியில் எதிர்க்கட்சிகளின் ‘பொது வேட்பாளராக’ களம் இறங்கக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதுவரை எந்தவொரு தேர்தலிலும் கூட்டணி வைக்காமல் தனித்து மட்டுமே போட்டியிடுவோம் என்ற கொள்கை முழக்கத்தோடு பயணித்த சீமானின் இந்த புதிய நகர்வு, அவரது அரசியல் எதிரிகளாலும் ஆதரவாளர்களாலும் உற்றுநோக்கப்படுகிறது.

இந்த இடைத்தேர்தல் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு மிக முக்கியமான சவாலாகும். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்ற முதலமைச்சர் விஜய் தனது பதவியை ராஜினாமா செய்ததாலும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததாலும் இந்த 6 தொகுதிகள் காலியாகின. தற்போதைய சூழலில் சட்டமன்றத்தில் தவெகவிற்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், இந்த இடைத்தேர்தல் முடிவுகள் அக்கட்சியின் ஆட்சித் நிலைத்தன்மைக்கு மிக முக்கியமானது. இதனால், தவெகவின் வெற்றியைத் தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் கைகோர்க்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

திரைமறைவில் பேசப்பட்டு வரும் இந்த புதிய வியூகத்தின்படி, எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் வாக்குகளைப் பிரித்துக் கொள்ளாமல் ஆளுங்கட்சியைத் தனிமைப்படுத்த திட்டமிட்டுள்ளன. இதற்காக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் தங்களுக்குள் தொகுதிகளைப் பகிர்ந்துகொண்டு, குறிப்பிட்ட தொகுதிகளில் வலுவான வேட்பாளர்களை நிறுத்த ஆலோசித்து வருகின்றன. அந்த வகையில், தாராபுரம், பெருந்துறை, விராலிமலை ஆகிய தொகுதிகளில் அதிமுகவும், திருச்சி கிழக்கு மற்றும் மதுராந்தகத்தில் திமுகவும் போட்டியிடலாம் எனத் தெரிகிறது. அதேநேரம், அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானை பொது வேட்பாளராக நிறுத்தினால் அதற்கு ஆதரவளிக்க திமுக சம்மதம் தெரிவித்துள்ளதாக வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளன.

“திராவிடக் கட்சிகளை ஒழிப்பதே எங்கள் முதல் வேலை” என்று மேடைகள்தோறும் முழங்கி, தமிழ்நாட்டு அரசியலில் மாற்று சக்தியாகத் தன்னை முன்னிறுத்திய சீமான், இப்போது அதே திராவிடக் கட்சிகளின் மறைமுக ஆதரவை ஏற்பாரா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. சட்டமன்றத்திற்குள் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்ற நோக்கத்திற்காக, தனது நீண்டகால அரசியல் கொள்கையான ‘தனித்துப் போட்டி’ என்பதை சீமான் கைவிடுகிறாரா என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. கோட்டையைப் பிடிப்பதற்காக கொள்கைகளை சமரசம் செய்து கொள்வது நாம் தமிழர் கட்சியின் தனித்துவமான அடையாளத்தையே சிதைத்துவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மறுபுறம், இந்த விவகாரத்தை தமிழக வெற்றிக் கழகத்தினர் சீமானுக்கு எதிரான ஒரு பெரிய ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். கொள்கை விசயத்தில் தவெக தலைவர் விஜய் எடுத்த நடுநிலையான நிலைப்பாட்டை, “நடுவில் நின்றால் லாரியில் அடிபட்டுத்தான் சாக வேண்டும்” என சீமான் முன்பு கடுமையாகச் சாடியிருந்தார். தற்போதைய சூழலைச் சுட்டிக்காட்டும் தவெகவினர், “அன்று விஜயை விமர்சித்த சீமான், இன்று திராவிடக் கட்சிகளின் ஆதரவோடு சட்டமன்றம் செல்ல முயல்வது என்ன மாதிரியான கொள்கை?” என்று கேள்வி எழுப்பி சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.

இருப்பினும், எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டு வியூகம் தங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தாது, மாறாக சாதகமாகவே முடியும் என்று முதலமைச்சர் விஜய் தரப்பு நம்புகிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களுக்கு எதிராக ஒன்றிணையும் போது, “நாங்கள் தனியாக நின்று அனைவரையும் எதிர்க்கும் அளவிற்கு வலுவடைந்துவிட்டோம்” என்ற பிம்பத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என தவெக கருதுகிறது. மேலும், அனைத்துக் கட்சிகளும் ஒரு புதிய ஆட்சிக்கு எதிராகத் திரள்வது பொதுமக்களிடையே தவெக மீது ஒரு அனுதாப அலையை உருவாக்கி, இடைத்தேர்தலில் தங்களுக்குப் பெரும் லாபத்தைத் தரும் என்றும் அவர்கள் கணக்குப்போடுகிறார்கள்.

SATHISH R

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

6 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

6 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

8 மணத்தியாலங்கள் ago