தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தரின் இசைக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்பொழுது ‘தர்மன்’ உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் இவரது திரைப்பயணம் ஒருபுறம் வெற்றிகரமாகச் சென்று கொண்டிருந்தாலும், சமூக வலைத்தளங்களில் இவரது திருமணம் குறித்த செய்திகள் தான் தற்போதைய ஹாட் டாபிக். 35 வயதை எட்டவிருக்கும் அனிருத்துக்கும், சன் நெட்வொர்க் அதிபர் கலாநிதி மாறனின் மகளும், எஸ்.ஆர்.ஹெச் ஐபிஎல் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனுக்கும் இடையே ரகசிய காதல் இருப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் இணையத்தில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுவரை இந்த செய்திகளுக்கு அதிகாரப்பூர்வ மறுப்புகள் கூறப்பட்டு வந்தாலும், தற்பொழுது திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களின் கருத்துக்கள் இந்த வதந்திகளுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளன. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மூத்த நடிகை குட்டி பத்மினி, “அனிருத் மிகவும் சாதுவான பையன், அவர் விரைவில் ஒரு பெரிய இடத்தில் திருமணம் செய்யவுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மணமகளைப் பற்றிப் பேசுகையில், “அந்தப் பெண் சாதாரணமானவர் கிடையாது; ஒரு ஒட்டுமொத்த கிரிக்கெட் டீமையே சாமர்த்தியமாக வழிநடத்தும் திறமை கொண்டவர். தந்தையின் தொழிலதிபர் ஜீன் அவருக்கும் அப்படியே இருக்கிறது. அனிருத்தும் அந்தப் பெண்ணும் இணைந்தால் அது ஒரு சூப்பர் ஜோடியாக இருக்கும், இருவரும் இணைந்து மியூசிக் பிசினஸில் பெரிய அளவில் சாதிப்பார்கள்” என்று காவ்யா மாறனை சூசகமாகக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.
குட்டி பத்மினியைத் தொடர்ந்து, அனிருத்தின் நெருங்கிய உறவினரும் மூத்த நாடகக் கலைஞருமான ஒய்.ஜி.மகேந்திரனும் இந்த திருமணச் செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் பேசியுள்ளதாகத் தெரிகிறது. திரைத்துறையின் இந்த முக்கியப் புள்ளிகள் அடுத்தடுத்து அனிருத் – காவ்யா மாறன் ஜோடியின் திருமணத்தை சூசகமாகவும் நேரடியாகவும் உறுதிப்படுத்தி வருவதால், ரசிகர்கள் தற்போதே இந்த ‘பவர் கப்பிள்’-க்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஒட்டுமொத்த இணையமும் இந்த பிரம்மாண்ட திருமணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் நிலையில், அனிருத் தரப்பிலிருந்து விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை…
தமிழக அரசியல் களம் எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு துருவங்களை மையமாகக்கொண்டே சுழன்று வந்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,…
நாக்பூரைச் சேர்ந்த ராஜேந்திர தெம்ரே என்ற ஆட்டோ ஓட்டுநர், தமக்குத் தற்செயலாகக் கிடைத்த கூடுதல் பணத்தைக் கொண்டு செய்த நற்செயல்…
சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்ற அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக மருந்துக்கடைகளுக்கும் மருத்துவமனைக்கும் ஓடுவதைத் தவிர்த்து, நம் வீட்டு…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் இளையராஜாவுக்கு கொலை மிரட்டல்…
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள…