தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்காக ₹755 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் BIS ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட ₹17,000 மதிப்பிலான 1 கிராம் தங்க மோதிரம் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது. குழந்தைகள் எண்ணிக்கையோ அல்லது ஆண், பெண் என்ற பாலின பாகுபாடோ இன்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் இச்சலுகை பொருந்தும். 2026 ஜூன் 22 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த தகுதியுள்ள குழந்தைகள் அனைவரும் பயன்பெறும் வகையில், இத்திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் முழு வீச்சில் அமல்படுத்தப்படவுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாகவும், PICME அமைப்பில் RCH ID பதிவு செய்த தாயாகவும் இருந்தால் மட்டுமே இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள் ஆவர். பயனாளிகள் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பித்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகும்போதே மோதிரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஒரே நபர் மீண்டும் பயன்பெறுவதையும், போலிப் பதிவுகளையும் தடுக்க முக அங்கீகாரம் மற்றும் விழித்திரை ஸ்கேன் மூலமாகப் பயனாளிகள் உறுதிசெய்யப்பட்டு உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை அருகே, குடும்பத் தகராறு காரணமாக மனைவியை குடும்பம் நடத்த அழைத்தபோது ஏற்பட்ட…
வடமேற்கு டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு,…
பூமியிலிருந்து பார்க்கும்போது அமைதியாகக் காட்சியளிக்கும் நிலவில், கடந்த 2024-ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய விண்வெளி மோதல் நிகழ்ந்துள்ளது. 2024 ஏப்ரல்…
தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது, அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் துன்புறுத்தல், ஏமாற்றுதல் மற்றும்…
மதுரையைச் சேர்ந்த தமிழக அமைச்சர்களான CTR நிர்மல் குமார், விஸ்வநாதன் இடையே உள்கட்சி பூசல் மற்றும் பனிப்போர் நிலவி வருவதாக…
\ தமிழ்நாட்டு அரசியலில் தற்போதைய கூட்டணி மாற்றங்களும், தலைவர்களின் பரஸ்பர விமர்சனங்களும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இது குறித்து பிரபல…