கரூரில் பரிகாரம் செய்வதாக கூறி இளம் பெண்ணை ஏமாற்றி சாமியார் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரை சேர்ந்த பிரவீனா என்ற பெண்ணின் தாய்க்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சக்திவேல் என்ற சாமியாரிடம் அந்த பெண் சென்றுள்ளார். அப்போது அந்த சாமியார் உடல்நல பாதிப்பை சரி செய்வதற்கு சில பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று கூறியதுடன் 10 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய பிரவீனா அந்த சாமியாரிடம் முதலில் 5 லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்து பரிகாரங்களை செய்ய கூறியுள்ளார்.
அதன்படி சாமியாரும் பரிகாரம் செய்த நிலையில் எதிர்பார்த்தபடி தனது தாய்க்கு உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ஏமாற்றமடைந்த பிரவீனா உடனே சாமியாரிடம் சென்று தன் பணத்தை கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தர முடியாது என்று கூறி சக்திவேல் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து பிரவீனா உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமியார் சக்திவேலை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் போலி சாமியாரை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…