சென்னை மக்களே… இனி வீட்டில் உள்ள பழைய பொருட்களை எளிதில் அகற்றலாம்… மாநகராட்சியின் புதிய சேவை…!

Spread the love

சென்னையில் வீடுகளில் இருக்கும் சோபாக்கள், படுக்கைகள் உள்ளிட்ட பழைய பொருட்களை அகற்றுவதற்காக மாநகராட்சி ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பொதுவாகவே வீடுகளில் தேவையற்ற பொருட்கள் நிறைய இருக்கும். அதில் சில பொருட்களை அகற்றுவது மிகவும் சிரமம். இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னை மாநகர பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுடைய வீடுகளில் தேங்கி இருக்கும் பயன்படுத்த முடியாத அல்லது பழைய பொருட்களை அகற்றுவதற்காக மாநகராட்சி ஒரு புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி வீடுகளில் இருக்கும் தேவையற்ற பொருட்களான பழைய சோபாக்கள் மற்றும் மர சாமான்கள், மின்னணு கழிவுகள் ஆகிய பொருள்களை மாநகராட்சியின் உதவியுடன் அகற்றுவதற்கான வழிமுறைகளை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.

அவ்வகையில் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அகற்ற வேண்டும் என்றால் சென்னை மாநகராட்சி உதவி எண் 1913 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் போதும். அவர்களே உங்களுடைய வீட்டிற்கு வந்து பழைய பொருட்களை எடுத்துச் சென்று விடுவார்கள். இந்த சேவை வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மட்டுமே கிடைக்கும். இந்த சேவை தேவைப்படும் பொதுமக்கள் மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணுக்கு அழைக்கலாம் அல்லது 9445061913 என்ற whatsapp எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் நம்ம சென்னை சய்தியில் பதிவு செய்தோம் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

6 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

6 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

6 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

7 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

7 மணத்தியாலங்கள் ago