Categories: சினிமா

14 நாட்கள் தொடர் சிகிச்சை… நடிகர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை… சோகத்தில் ரசிகர்கள்…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வளம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் தனது ரசிகர்களால் ‘கேப்டன்’ என அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் 156 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் நடிகர் விஜயகாந்த். இவருடைய இடத்தை எந்த நடிகராலும் இதுவரை முடியவில்லை.

இவர் தமிழ் சினிமாவில் செய்த சாதனைகள் ஏராளம். தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழிகளிலும் நடிகர் விஜயகாந்த் நடித்தது கிடையாது. இவர் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.  நடிகராக மட்டுமின்றி ஒரு தலைசிறந்த அரசியல்வாதியாகவும் செயல்பட்டார். கடந்த சில வருடங்களாக உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுக் கொண்டு வருகிறார் நடிகர் விஜயகாந்த்.

கம்பீரமாக திரையில் பார்த்த நடிகர் விஜயகாந்தை, தற்பொழுது இந்த நிலையில் பார்க்கும் அவரது ரசிகர்கள் கண்கலங்கி வருகின்றனர். அவ்வப்பொழுது  நடிகர் விஜயகாந்த்தை திரைபிரபலங்கள் நேரில் சென்று சந்தித்தும் வருகின்றனர். இவர் அவ்வப்போது உடற்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்று  வருவார். அப்படி  பரிசோதனைக்கு சென்று இருந்த போது அவருக்கு சளி, காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு இருந்ததால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு விஜயகாந்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சளி, காய்ச்சல், இருமல் பாதிப்பால் கேப்டன் விஜயகாந்துக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாகவும்,  அவருக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று நடிகர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘திரு. விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.  தொடர்ந்து தொண்டர்களும் , ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதோ அந்த அறிக்கை…

Begam

Recent Posts

“வகுப்பை ஒழுங்கா கவனிங்க தம்பி”… “1 மணி நேரத்துல ஓடிப்போனா எப்படி தெரியும்?”…. உதயநிதியை நக்கலடித்த தவெக அமைச்சர்…!

தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்தது முதலே, எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டு வரும் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் அரசின்…

46 minutes ago

1,200 கி.மீ தொலைவில் தொலைந்த முதியவர்… ஒரே ஒரு வார்த்தையை வச்சு தூக்கிய ChatGPT… பீகார் இளைஞர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்திலுள்ள பதேகர் குஜ்ரன் கிராமத்தைச் சேர்ந்த 72 வயதான சமன் லால், தீவிர ஞாபக மறதிப்…

54 minutes ago

“என்னை காப்பாத்துங்க”…. ஓடும் லாரியில் கதறியபடி 1 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்ட காவலர்…. நடுரோட்டில் நடந்த பயங்கரம்…!

மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டத்திற்குட்பட்ட மஸ்வத் பகுதியில், சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவலரை லாரியிலேயே சுமார் ஒரு…

1 மணத்தியாலம் ago

26 வயது இளைய மனைவி… சாப்பாட்டில் தூக்க மாத்திரை… எஸ்.ஐ ராஜ் கொலையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் உறைந்த உண்மை….!

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில், ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் (SI) ராஜ் (58)…

1 மணத்தியாலம் ago

“246 கேள்விகள்… 7 மணி நேரம்”…. அப்ரூவல் மோசடியில் அடுத்த விக்கெட்?…. வளைத்துப்பிடித்த CCB…. சிக்கிய அன்பில் மகேஸின் நிழல்….!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு மற்றும் நகர் ஊரமைப்புத் துறை (DTCP) அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு…

1 மணத்தியாலம் ago

BREAKING: CM விஜய் போட்ட ஒற்றை உத்தரவு… வீரமணி வழக்கில் சிக்கிய அடுத்த நபர்…. அதிரடி கைது….!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான தொழிலதிபர் வீரமணிக்கு உடந்தையாக இருந்த கணேசன் என்பவர் தற்போது காவல்துறையினரால் கைது…

1 மணத்தியாலம் ago