“என்னை காப்பாத்துங்க”…. ஓடும் லாரியில் கதறியபடி 1 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்ட காவலர்…. நடுரோட்டில் நடந்த பயங்கரம்…!

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டத்திற்குட்பட்ட மஸ்வத் பகுதியில், சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவலரை லாரியிலேயே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மகாவீர் கோகரே, பதிவு எண் இன்றி சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த டம்ப்பர் லாரி ஒன்றை மறித்துச் சோதனையிட்டார். அப்போது, அதில் எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட மணல் ஏற்றி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மணல் கடத்தலுக்கான உரிய அனுமதிப் பத்திரத்தைக் காவலர் கேட்டபோது, லாரி ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென வாகனத்தை இயக்கித் தப்பியோட முயன்றபோது, காவலர் கோகரே லாரியின் கதவைப் பிடித்துத் தடுக்க முற்பட்டார். ஆனால், லாரியை நிறுத்தாத ஓட்டுநர், வேகத்தை அதிகரித்துச் சாலையிலேயே காவலரை ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றுள்ளார். இந்தத் தாக்குதலில் தீவிர காயமடைந்த காவலர் கோகரேவை, அப்பகுதி மக்களும் சக காவலர்களும் மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் சுயநினைவு திரும்பியதும் காவலர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மஸ்வத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகள் இருவரைப் காவல்துறையினர் விரைந்து கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தின் பின்னணியில் செயல்படும் மணல் மாஃபியா கும்பல் மற்றும் லாரியின் உரிமையாளர் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“வகுப்பை ஒழுங்கா கவனிங்க தம்பி”… “1 மணி நேரத்துல ஓடிப்போனா எப்படி தெரியும்?”…. உதயநிதியை நக்கலடித்த தவெக அமைச்சர்…!

தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்தது முதலே, எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டு வரும் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் அரசின்…

1 மணத்தியாலம் ago

1,200 கி.மீ தொலைவில் தொலைந்த முதியவர்… ஒரே ஒரு வார்த்தையை வச்சு தூக்கிய ChatGPT… பீகார் இளைஞர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்திலுள்ள பதேகர் குஜ்ரன் கிராமத்தைச் சேர்ந்த 72 வயதான சமன் லால், தீவிர ஞாபக மறதிப்…

1 மணத்தியாலம் ago

26 வயது இளைய மனைவி… சாப்பாட்டில் தூக்க மாத்திரை… எஸ்.ஐ ராஜ் கொலையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் உறைந்த உண்மை….!

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில், ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் (SI) ராஜ் (58)…

1 மணத்தியாலம் ago

“246 கேள்விகள்… 7 மணி நேரம்”…. அப்ரூவல் மோசடியில் அடுத்த விக்கெட்?…. வளைத்துப்பிடித்த CCB…. சிக்கிய அன்பில் மகேஸின் நிழல்….!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு மற்றும் நகர் ஊரமைப்புத் துறை (DTCP) அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: CM விஜய் போட்ட ஒற்றை உத்தரவு… வீரமணி வழக்கில் சிக்கிய அடுத்த நபர்…. அதிரடி கைது….!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான தொழிலதிபர் வீரமணிக்கு உடந்தையாக இருந்த கணேசன் என்பவர் தற்போது காவல்துறையினரால் கைது…

2 மணத்தியாலங்கள் ago

“ஜோதிடர் சொல்றதை செய்யுறவருக்கு எதுக்கு CM பதவி?”…. ஜோசியரையே CM ஆக்கிவிட்டு போயிருக்கலாம்…. முதலமைச்சர் விஜய்யை மேடையிலேயே வாரி முடிச்ச சீமான்….!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தவெக ஆட்சியில் ரூல்ஸ் எதுவுமில்லை, வெறும்…

2 மணத்தியாலங்கள் ago