1,200 கி.மீ தொலைவில் தொலைந்த முதியவர்… ஒரே ஒரு வார்த்தையை வச்சு தூக்கிய ChatGPT… பீகார் இளைஞர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்…!

Spread the love

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்திலுள்ள பதேகர் குஜ்ரன் கிராமத்தைச் சேர்ந்த 72 வயதான சமன் லால், தீவிர ஞாபக மறதிப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர். சமீபத்தில் அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குக் குடும்பத்தினருடன் ஆன்மிகப் பயணம் சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர்களைப் பிரிந்தார். கையடக்கத் தொலைபேசி ஏதும் இல்லாததால் குடும்பத்தாரால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. வழி தெரியாமல் தவித்த சமன் லால், தவறுதலாக ரயிலில் ஏறி சுமார் 1,200 கி.மீ தொலைவிலுள்ள பீகார் மாநிலத்தின் கயா பகுதிக்குச் சென்று சேர்ந்தார். உணவும் இருப்பிடமும் இன்றித் தவித்த அவர், கயாவைச் சேர்ந்த நீரஜ் என்ற இளைஞரிடம் உணவு கேட்டுச் சென்றுள்ளார். முதியவரின் பரிதாப நிலையைக் கண்டு இரக்கப்பட்ட நீரஜ், அவரைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆதரவளித்தார்.

பஞ்சாபி மொழி மட்டுமே தெரிந்த சமன் லால், தன் கிராமத்தின் பெயரான ‘பதேகர் குஜ்ரன்’ என்பதை மட்டுமே நீரஜிடம் கூறினார். அந்தப் பெயரை வைத்து செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான ‘சாட்ஜிபிடி’ (ChatGPT) உதவியுடன் தேடிய நீரஜ், அக்கிராமம் பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் இருப்பதைத் துல்லியமாகக் கண்டறிந்தார். முதியவரைத் தனியாக அனுப்ப இயலாது என்பதால், தாமே அவருடன் பஞ்சாபிற்குப் பயணம் செய்து அவரது குடும்பத்தைக் கண்டுபிடித்து ஒப்படைத்தார். தொழில்நுட்பத்தின் சாதுரியமான பயன்பாடும், நீரஜின் நெகிழ வைக்கும் மனிதநேயமும் இணைந்து ஒரு குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைத்த இச்சம்பவம், அக்கிராம மக்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன், நீரஜுக்கு எல்லையற்ற நன்றியையும் பாராட்டுகளையும் பெற்றுத் தந்துள்ளது.

Nanthini

Recent Posts

“வகுப்பை ஒழுங்கா கவனிங்க தம்பி”… “1 மணி நேரத்துல ஓடிப்போனா எப்படி தெரியும்?”…. உதயநிதியை நக்கலடித்த தவெக அமைச்சர்…!

தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்தது முதலே, எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டு வரும் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் அரசின்…

60 minutes ago

“என்னை காப்பாத்துங்க”…. ஓடும் லாரியில் கதறியபடி 1 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்ட காவலர்…. நடுரோட்டில் நடந்த பயங்கரம்…!

மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டத்திற்குட்பட்ட மஸ்வத் பகுதியில், சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவலரை லாரியிலேயே சுமார் ஒரு…

1 மணத்தியாலம் ago

26 வயது இளைய மனைவி… சாப்பாட்டில் தூக்க மாத்திரை… எஸ்.ஐ ராஜ் கொலையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் உறைந்த உண்மை….!

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில், ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் (SI) ராஜ் (58)…

1 மணத்தியாலம் ago

“246 கேள்விகள்… 7 மணி நேரம்”…. அப்ரூவல் மோசடியில் அடுத்த விக்கெட்?…. வளைத்துப்பிடித்த CCB…. சிக்கிய அன்பில் மகேஸின் நிழல்….!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு மற்றும் நகர் ஊரமைப்புத் துறை (DTCP) அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு…

1 மணத்தியாலம் ago

BREAKING: CM விஜய் போட்ட ஒற்றை உத்தரவு… வீரமணி வழக்கில் சிக்கிய அடுத்த நபர்…. அதிரடி கைது….!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான தொழிலதிபர் வீரமணிக்கு உடந்தையாக இருந்த கணேசன் என்பவர் தற்போது காவல்துறையினரால் கைது…

2 மணத்தியாலங்கள் ago

“ஜோதிடர் சொல்றதை செய்யுறவருக்கு எதுக்கு CM பதவி?”…. ஜோசியரையே CM ஆக்கிவிட்டு போயிருக்கலாம்…. முதலமைச்சர் விஜய்யை மேடையிலேயே வாரி முடிச்ச சீமான்….!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தவெக ஆட்சியில் ரூல்ஸ் எதுவுமில்லை, வெறும்…

2 மணத்தியாலங்கள் ago