Categories: CINEMA

தமிழ் திருமணங்களில் நடக்கும் புது கலாச்சாரம்.. கருப்பா இருந்தா 500 ரூபா, சிவப்பா இருந்த 1500 ரூபா.. வெளியான அதிர்ச்சி தகவல்..

முந்தைய காலத்தில், திருமணங்கள், மணமகள் வீடுகளிலோ அல்லது அருகில் உள்ள கோவில்களிலோ மிக எளிமையாக நடந்தன. இப்போது, திருமணம் என்பது வசதி படைத்தவர்களின் ஆடம்பர திருவிழாவாக மாறிவிட்டது. கேட்டரிங், ஆர்க்கெஸ்ட்ரா, டெக்கரேஷன், மேக்கப் செக்‌ஷன் என பலவிதமான ஆடம்பர விஷயங்கள் இதில் கொண்டுவரப்பட்டு விட்டன. இப்போது வெல்கம் கேர்ள்ஸ் என்ற புதிய கலாசாரம் தமிழ்நாட்டு திருமணங்களில் அதிகரித்து வருகிறது. அதாவது திருமண மண்டபங்களில் நுழையும் வாயலில் ரிஷப்சனிஸ்ட் பகுதியில்நின்று வரவேற்கும் பெண்கள்தான் வெல்கம் கேர்ள் என அழைக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து வெல்கம் கேர்ள் ஈவன்ட் ஆர்கனைசர், நடிகை மதுப்பிரியா நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, இதை பார்ட் டைம் ஆக கல்லூரி மாணவியர், குடும்ப பெண்கள் ஆர்வமாக வருகின்றனர். இதில் குறிப்பிட்ட சில மணி நேரங்களில் நல்ல வருமானம் கிடைக்கிறது. இதில் நல்ல நிறமாக இருக்கும் பெண்களுக்கு ரூ. 700 முதல், ரூ. 1500 முதல் சம்பளமாக கிடைக்கும். அவர்களுக்கேற்ப நல்ல உயர்தர ஆடைகளும், நிகழ்ச்சியின் போது உடுத்திக்கொள்ள தரப்படும். அதே போல் நிறம் குறைந்த, கருப்பான பெண்களுக்கு ரூ. 500 முதல் 600, ரூ. 700 வரை சம்பளம், அவர்களுக்கு ஏற்ப உடைகள் தரப்படும்.

இதில் மிக அழகான பெண்கள் மட்டுமே, ரிஷப்சன் பகுதியில் நிற்க அனுமதிக்கப்படுவர். சுமாராக உள்ள பெண்களை, மண்டபத்தில் டைனிங் ஹாலில் சூப்பர்வைசராக நிறுத்தி விடுவர். சிலரை ஜூஸ் போன்றவற்றை தருமாறும் கூறுவர். திருமணத்துக்கு வரும் சிலர், இந்த பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதும் உண்டு. சில பெண்களை ஏமாற்றி, இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு உன்னை வெல்கம் கேர்ள் வேலைக்கு அழைக்கிறேன் என்று கூறி பெண்களை ஏமாற்றுபவர்களும் உண்டு. ஒரே இடத்தில் பெண்களுக்கு இடையே கருப்பு, சிவப்பு என்ற பாகுபாடு காட்டுவது மிகவும் அபத்தமான, ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக தான் இருக்கிறது. ஆனால் வருமானம் முக்கியம் என்பதால் அதையும் பெண்கள் சகித்துக்கொள்வதை தவிர வேறு வழியின்றி வருகின்றனர் என்கிறார் மதுப்பிரியா.

Sumathi
Sumathi

Recent Posts

‘நாங்கள் அடைந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தை இல்லை’.. மகளின் திருமண வீடியோவை வெளியிட்டு தந்தையாக நெகிழ்ந்த அர்ஜுன்..!

நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா மற்றும் உமாபதியின் திருமணம் தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு…

8 நிமிடங்கள் ago

விருது விழாவிற்கு படு கவர்ச்சியான உடையில் சென்ற நடிகை ராசி கண்ணா.. லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்..!

நடிகை ராசி கண்ணா வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதைப் பார்த்த ரசிகர்கள் லைக்…

42 நிமிடங்கள் ago

அம்பானி குடும்பத்துல குடிக்கிற பால் கூட அறிய வகை தானாம்.. ஒரு லிட்டர் பாலின் விலை மட்டும் எவ்வளவு தெரியுமா..?

இந்திய பணக்காரர்களிலேயே டாப் 5 லிஸ்டில் இருக்கும் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் அரியவகை மாட்டின் பாலை தான் குடிப்பார்களாம். இது…

57 நிமிடங்கள் ago

ஆங்கர் வேலை போனதால் சலூன் கடையை ஆரம்பித்த பிரபல தொகுப்பாளர்.. வெளியான வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்..!!

பிரபல தொகுப்பாளரான கமல் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒளிபரப்பான கொஞ்சம் காபி நிறைய சினிமா என்ற ஷோ மூலமாக முதன்…

58 நிமிடங்கள் ago

பல கோடி மதிப்பிற்கும் Lamborghini காரை வைத்திருக்கும் பிரபலங்கள்.. இதில் அஜித் வைத்திருக்க கார் ரேட் தான் டாப்பு..!

பல கோடி மதிப்பிற்கும் லம்போகினி காரை வைத்திருக்கும் பிரபலங்களின் லிஸ்டைதான் இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம். பொதுவாக நடிகர்களுக்கு…

1 மணி நேரம் ago

தன்னை வளர்த்து விட்ட இயக்குனருடனே மோதும் விக்ரம்.. கடைசியில் யார் ஜெயிப்பார்களோ..!!

பிரபல இயக்குனரான பாலா முன்னணி நடிகரான விக்ரமின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை கொண்டு வந்தவர். நடிகர் விக்ரம்…

1 மணி நேரம் ago