#image_title
நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா மற்றும் உமாபதியின் திருமணம் தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் அர்ஜுன். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தம்பிராமையாவின் மகனான உமாபதியை காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் சில மாதத்திற்கு முன்பு நடிகர் அர்ஜுன் கெருகம்பாக்கத்தில் கட்டி இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்பு மிகவும் எளிமையாக நிச்சயதார்த்தம் நடைபெற்ற முடிந்தது.
இது தொடர்பான புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. அதையடுத்து அர்ஜுன் பல படங்களில் பிஸியாக நடித்து வந்த காரணத்தினால் ஜூன் மாதம் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார்கள். அதன்படி ஜூன் 10ஆம் தேதி இவர்களது திருமணம் அதே ஆஞ்சநேயர் கோயிலில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
நடிகர் அர்ஜுன் குடும்பத்தினரும் தம்பி ராமையாவின் குடும்பத்தினரும் பல பிரபலங்களின் வீடுகளுக்கு சென்று திருமண பத்திரிகையை கொடுத்து வந்தார்கள். அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மிகப்பிரமாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த திருமணத்தில் நடிகர் விஷால், நடிகர் விஜயகுமார், கேஸ் ரவிக்குமார், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மற்ற பிரபலங்கள் அனைவரும் ரிசப்ஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. நடிகர் அர்ஜுன் 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு பிறந்த மகள்கள் தான் ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா.
இதில் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா தான் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். விஷால் நடிப்பில் வெளியான பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு படங்கள் அமையவில்லை. இதனால் தற்போது தனது காதலர் உமாபதியை திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணம் தொடர்பான வீடியோவை நடிகர் அர்ஜுன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…