#image_title
கடந்த 1940 முதல் 1980 வரை தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக இருந்தவர் எம்.எஸ் விஸ்வநாதன். இவர் எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் இசையமைப்பாளராக வேலை பார்த்துள்ளார். கடந்த 1968-ஆம் ஆண்டு சிவாஜி நடிப்பில் உயர்ந்த மனிதன் படம் ரிலீஸ் ஆனது.
இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. இது சிவாஜியின் 125-வது படம் ஆகும். இந்த படத்தில் வாணிஸ்ரீ, சிவகுமார், சௌகார் ஜானகி, மேஜர் சுந்தர் ராஜன், அசோகன் உள்ளிட்ட பலர் நடித்தனர் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. உயர்ந்த மனிதன் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது. அதில் அந்த நாள் ஞாபகம் என்ற பாடல் மக்களை வெகுவாக கவர்ந்தது.
பணக்கார நண்பனை அழைத்துக் கொண்டு சுற்றுலா செல்லும்போது வாலிபன் நினைவுகளை மனதில் வைத்து பாடுவது தான் இந்த பாடல். மேஜர் சுந்தரராஜனும் சிவாஜியும் பேசும் வசனங்களை சேர்த்து வாலி சிறப்பாக பாடலை எழுதியிருப்பார். சமீபத்தில் இந்த படத்தின் எடிட்டர் ஏவிஎம் குமரன் ஒரு பேட்டி அளித்துள்ளார். நிகழ்ச்சி தொகுப்பாளர் பாடலின் போது மேஜர் சுந்தரராஜன் ஓடி வரும்போது அவரது கால் லேசாக தடுமாறும்.
அதனை கவனித்தீர்களா என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த எடிட்டர் குமரன் ஷூட்டிங் நடக்கும் போது அதனை கவனித்தோம். இதுகுறித்து அந்த சீனை மறுபடியும் எடுக்கலாமா என யோசித்தோம் உடனே சிவாஜி அதெல்லாம் வேண்டாம் ஓடி வரும் போது கால் தடுமாறுவது எதார்த்தம் தானே. அது இருக்கட்டும் என கூறினார். நாங்களும் ஆமாம் அதுவும் சரியே. அப்படியே இருக்கட்டும் என கூறிவிட்டோம். தெரிந்த தான் அதனை அப்படியே விட்டு விட்டோம் என ஓப்பனாக கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கௌதம் புத்த நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த எட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர்…
தாக்கூர்கஞ்ச் நியூ ஹைதர்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள சில்வர் சிட்டி காலனியில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த தம்பதியினரை கடுமையாகத்…
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் அருகேயுள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் வெடித்தது. அங்கிருந்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த 65 வயதான சுகிராம் கேவத் என்பவர், புனிதம் வாய்ந்த கயா தலத்திற்குச் சென்று…
சமூகத்தில் எழும் ஒவ்வொரு ஒழுங்கீனத்திற்கும் காவல்துறையையே கைகாட்டி குற்றஞ்சாட்டுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், ஒரு தனிமனிதனின் குணநலனும் சமூகப் பொறுப்பும் முதலில்…
நான்கு சுவர்களுக்குள் இருக்கும் சொந்த இல்லமே ஒரு மனிதனுக்கு மிகப்பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகிறது. ஆனால், பட்டப்பகலிலோ அல்லது பெற்றோர் இல்லாத…