#image_title
பிரபல தொகுப்பாளரான கமல் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒளிபரப்பான கொஞ்சம் காபி நிறைய சினிமா என்ற ஷோ மூலமாக முதன் முதலில் தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சி ஜீ தமிழில் ஒளிபரப்பானது. அதன் பிறகு ஆஹா மாமியார் ஓஹோ மருமகள் என்ற நிகழ்ச்சியும் கமல் தண்டபாணி தொகுத்து வழங்கினார்.
இதனை அடுத்து அதிர்ஷ்ட லட்சுமி என்ற நிகழ்ச்சியையும் கமல் தண்டபாணி தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியை கமலும் பிரபல தொகுப்பாளனி மகேஸ்வரியும் தொகுத்து வழங்கினர். கடந்த 2018-ஆம் ஆண்டு காமெடி கில்லாடி என்ற ரியாலிட்டி ஷோவை கமல் தண்டபாணி தொகுப்பு வழங்கினார். இதையும் மகேஸ்வரியும் கமலும் தொகுத்து வழங்கி உள்ளனர்.
சென்னை சேர்ந்த கமல் தண்டபாணி கடந்த 2018-ஆம் ஆண்டு ஜீ தமிழ் குடும்ப விருதுகள் உள்ளிட்ட இரண்டு விருதுகளை வாங்கியுள்ளார். மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்த கமல் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டதாக விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலங்கள் நடிப்பு மட்டுமில்லாமல் பிற தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரபலங்கள் தங்கள் தொழில்களை பிரமோட் செய்யும் விதமாக போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிடுவார்கள். அந்த வகையில் தொகுப்பாளர் கமல் தண்டபாணி புதிதாக சலூன் தொடங்கியுள்ளார். இதுபற்றி கேட்ட போது, ஏற்கனவே ஆங்கர் வேலை இல்லாவிட்டால் அடுத்து என்ன செய்வது என்று யோசித்து வைத்தேன். அதனால் தான் இப்பொது வேலை இல்லாததால் சலூன் ஆரம்பித்து விட்டேன் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது வழக்கமான ஒன்றாக உள்ள சூழலில், நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் அரசியலில் களம்…
'வீ தி லீடர்ஸ்' அமைப்பைத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் சற்று மென்மையான மற்றும் அமைதியான போக்கையே…
மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்…
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள யோட்சுயா ரயில் நிலையம், தண்டவாளப் பகுதிகளில் வளர்ந்துள்ள தேவையற்ற புற்களை இயற்கையான முறையில்…
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கட்டடத்தின் 3-வது மாடி பால்கனியில் இருந்து குட்கா மென்று கீழே துப்பிய 65 வயது…
பிரான்சில் நடைபெற்ற போராட்டத்தில் மார்வெல் மற்றும் அனிமேஷன் கதாபாத்திரங்களின் உடைகளை அணிந்து கலந்துகொண்டவர்களின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும்…