பிரான்சில் நடைபெற்ற போராட்டத்தில் மார்வெல் மற்றும் அனிமேஷன் கதாபாத்திரங்களின் உடைகளை அணிந்து கலந்துகொண்டவர்களின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கேப்டன் அமெரிக்கா தண்ணீர் பீய்ச்சிடிக்கும் கலங்களை எதிர்த்து நிற்பது போன்றும், ஸ்பைடர்மேன் மற்றும் பேட்மேன் போன்ற பிரபல கதாபாத்திரங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வது போன்றும் பதிவாகியுள்ள காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.
இந்தக் கூட்டத்தில் மார்வெல் மற்றும் டிசி சூப்பர் ஹீரோக்கள் மட்டுமின்றி, ‘ஒன் பீஸ்’ அனிமேஷன் நாயகன் லஃபி மற்றும் டிராகன் பால் கதாபாத்திரமான பிக்கோலோ உள்ளிட்ட பலரும் காணப்பட்டனர். முகம்மூடிகள் மற்றும் ஹெல்மெட்டுகளுடன் போராட்டத்தில் பங்கேற்ற இந்த விசித்திரமான நபர்கள், கோஷங்களை எழுப்பியும் கூட்டத்தினரை உற்சாகப்படுத்தியும் போராட்டத்தை ஒரு சூப்பர் ஹீரோ சினிமா காட்சி போல மாற்றியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி மற்றும் கல்வி நிதி போன்ற பல்வேறு விவகாரங்கள் காரணமாக பிரான்சில் பொதுமக்களிடையே அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. இதற்கிடையில், மோதல்களையும் வன்முறைகளையும் தவிர்க்கும் வகையில் பிரான்ஸ் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனத்தில் சுமார் ரூ. 634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை…
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இடையேயான அண்மைய சந்திப்பு அரசியல்…
அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் தவெகவை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர் என்று…
தமிழகத்தில் சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது வழக்கமான ஒன்றாக உள்ள சூழலில், நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் அரசியலில் களம்…
'வீ தி லீடர்ஸ்' அமைப்பைத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் சற்று மென்மையான மற்றும் அமைதியான போக்கையே…
மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்…