#image_title
இந்திய பணக்காரர்களிலேயே டாப் 5 லிஸ்டில் இருக்கும் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் அரியவகை மாட்டின் பாலை தான் குடிப்பார்களாம். இது குறித்து தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளும் ஒரு உணவு பால். காலை எழுந்ததும் பால், டீ, காபி போன்றவை அருந்தினால் தான் அன்றைய நாள் சிறப்பாக இருக்கும் என பலரும் எண்ணுவதுண்டு. பாலை கொண்டு பல உணவுப் பொருட்களை தயாரிக்க முடியும். தயிர், நெய், வெண்ணெய், பன்னீர் போன்ற பல பொருட்களை நம்மால் செய்ய முடியும்.
இதில் ஏராளமான கால்சியம் மற்றும் விட்டமின், புரதம் போன்றவை இருப்பதால் அனைவரும் இதனை எடுத்துக் கொள்வார்கள். அது மட்டுமில்லாமல் மனிதர்களின் தசை, எலும்பு, பற்கள், தோல் போன்றவற்றுக்கு பால் மிகவும் சிறந்த உணவு. தினமும் சாதாரண மனிதர்கள் அருந்தும் பாலை விட மிகவும் அரியவகை பாலை தான் அம்பானி குடும்பத்தினர் அருந்துவார்களாம்.
இது குறித்து தகவல் தான் தற்போது வைரலாகி வருகின்றது. ஹோல்ஸ்டின் பிரீசியன் எனப்படும் அரியவகை மாட்டின் பாலை தான் அம்பானி குடும்பத்தை சேர்ந்த அனைவரும் பயன்படுத்துவார்களாம். இந்த வகை மாடுகள் அனைத்தும் நெதர்லாந்தை பூர்வீகமாகக் கொண்டது. கருப்பு மற்றும் வெள்ளை நிறப் புள்ளிகள் உடன் இந்த மாடுகள் காட்சியளிக்கும்.
இந்த மாடுகள் ஒரு நாளைக்கு 25 லிட்டர் வரை பால் கறக்கும். முகேஷ் அம்பானி குடும்பத்திற்காகவே புனேவிலிருந்து பிரத்தியேகமாக இந்த மாட்டின் பால் வரவழைக்கப்படுகின்றதாம். புனேவில் உள்ள பண்ணையில் இந்த வகை மாடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றது. 35 ஏக்கர் பரப்பளவு கொண்ட தோட்டத்தில் இந்த மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
அதுவும் இந்த மாடுகளுக்கு குடிப்பதற்கு ஆர்ஓ தண்ணீர் மட்டும் தான் கொடுக்கப்பட்டு வருகின்றதாம். அம்பானி குடும்பம் மட்டுமில்லாமல் மும்பையில் உள்ள பல பிரபலங்கள் இந்த வகை மாட்டின் பாலை தான் விரும்பி குடித்து வருகிறார்களாம். நாம் பயன்படுத்தும் சாதாரண பசு மாடுகளில் இருந்து கிடைக்கும் ஒரு லிட்டர் பாலின் விலை 45 முதல் 50 ரூபாய் வரை இருக்கும்.
ஆனால் இந்த மாடுகளின் பால் விலை ஒரு லிட்டருக்கு 152 ரூபாய் வரை இருக்கும் எனக் கூறப்படுகின்றது .அம்பானி குடும்பத்தினருக்கு இது மிகப்பெரிய விலை ஒன்றும் கிடையாது. அந்த வீட்டில் இருக்கும் அனைவரும் இந்த பாலை தான் கட்டாயம் அருந்துவார்களாம். இந்தியாவில் டாப் 5 பணக்கார பட்டியலில் ஒருவராக இருந்து வரும் அம்பானி குடும்பத்தினர் இந்த பாலிலே குளித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…