சமூக வலைத்தளங்கள் நம்மை ஆக்கிரமித்து விட்டது. நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நாம் நினைத்தாலும் கூட சமூக வலைத்தளங்களில் இருந்து தள்ளி இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு பின்னிப்பிணைந்து விட்டது. ஆனால் இந்த சமூக வலைத்தளங்களால் ஒவ்வொரு குடும்பங்களிலும் நடக்கும் பிரச்சனைகள் உறவுகளில் விரிசல் ஏற்படுவது ஆகியவற்றை பற்றி உங்களுக்கு தெரியுமா? சமூக ஊடகங்களால் என்னென்ன பிரச்சினைகள் உருவாகிறது என்பதை பற்றி இனி காண்போம்.
சமூக ஊடகங்களின் பயன்பாடு தற்போது பல மடங்கு அதிகரித்துவிட்டது. இதன் தேவைகள் ஒரு புறம் இருந்தாலும் இதன் எதிர்வினைகள் என்பது அதிகமாக இருக்கிறது. முன்பெல்லாம் நேருக்கு நேர் அமர்ந்து பார்த்து பேசுவார்கள். இப்போது சமூக ஊடகங்கள் வந்தது தான் எல்லாமே வாட்ஸ் அப்பில் செய்தி குறுஞ்செய்தி என்று உறவுகளுக்கு இடையே ஒரு பாலம் அமைத்து விட்டார்கள். இதனால் அன்பு பாசம் என்பது குறைந்து விடுகிறது. பேச்சுவார்த்தை குறைந்தால் உறவு எப்படி இருக்கும். அந்த நிலையில் தான் சென்று கொண்டே இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் ஒவ்வொருவர் பதிவிடுவதை பார்த்து நமது குடும்பத்தில் அப்படி இல்லையே நம்முடைய கணவரோ அல்லது மனைவி இப்படி நடந்து கொள்ளவில்லையே என்று எதிர்பார்ப்புகள் அதிகமாகி அதுவே பல பிரச்சினைகளுக்கும் சண்டை சச்சரவுகளுக்கும் வழிவகுக்கிறது. சமூக வலைத்தளத்தை பார்த்தோமா அதை விட்டோமா என்று பலர் நினைப்பது இல்லை. அதை தலையில் ஏற்றிக்கொண்டு நம் வாழ்க்கையிலும் அதை மாதிரி நடக்காதா என்று கற்பனையினால் பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
அடுத்ததாக சமூக வலைத்தளங்களில் அடிக்ட் ஆகி இருப்பவர்களும் உண்டு. வீட்டிற்குள் கணவன் மனைவியுடனும் மனைவி கணவனுடனும் இருவரும் சேர்ந்து குழந்தைகள் அப்பா அம்மா மாமியார் மாமனார் என நேரம் ஒதுக்க வேண்டும். இப்போதைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களை பார்த்துக்கொண்டே ஆளாளுக்கு தனித்தனியாக அமர்ந்து கொள்கிறார்கள். இதனால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை என்பது இல்லாமல் போகிறது. சிறிய விஷயங்களுக்கு கூட பெரிய அளவில் சண்டைகள் ஏற்படுகிறது.
சமூக ஊடகங்களால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அதற்கு முடிவில்லை. ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இந்த தொழில்நுட்பம் வளர்ந்தது அனைவரும் வாழ்க்கைக்கு தேவை தான் ஆனால் அவை நம்மை ஆட்டி வைக்க கூடாது நம்முடைய அன்றாட பணிகளையும் நமது குடும்ப வாழ்க்கையும் அது எந்த வகையிலும் பாதிக்க கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…
தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…
பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…