தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சமுத்திரக்கனி. 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்த சமுத்திரக்கனி திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று பல்வேறு சவால்களை மேற்கொண்டு வெற்றியை ருசித்தவர். திரைத் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று பல்வேறு சவால்களை மேற்கொண்டு வெற்றிகனியை ருசித்தவர். இயக்குனர் கே பாலச்சந்தரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய சமுத்திரக்கனி 2003 ஆம் ஆண்டு வெளியான உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.அவரது இயக்கத்தில் வெளியான முதல் படத்திற்கு சிறந்த கதைக்கான தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்ட் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படமும் நல்ல வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அரசி மற்றும் இதோ பூபாலன் போன்ற சீரியல்களை இயக்கியது மட்டுமல்லாமல் ஜன்னல் மற்றும் மர்ம தேசம் போன்ற சீரியல்களிலும் சமுத்திரக்கனி நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான அப்பா மற்றும் சாட்டை போன்ற திரைப்படங்கள் நடிகர் என்பதை தாண்டி இவரை வேறு தளத்திற்கு கொண்டு சென்றன. குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்த விசாரணை திரைப்படத்திற்காக சமுத்திரக்கனிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
இப்படி பல்வேறு பாராட்டுக்களும் விருதுகளும் கிடைத்திருந்தாலும் எப்போதும் மிகவும் எளிமையாகவே அனைவரிடத்திலும் பழகும் குணம் கொண்டவர். இவர் 2003 ஆம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் திரைப்படத்திற்கு கதை ஆசிரியராக பணியாற்றி திரைத்துறையில் அறிமுகமானார். தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லனாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், “பாலசந்தர் சார் சொன்ன விஷயம் என்னனா, என்கிட்ட இருக்கும்போது நல்லா softaa இருந்த, பருத்திவீரன் போயி அமீர் கிட்ட வேலை பார்த்ததால் தான் அவன் உன்ன rough ஆக்கிட்டான். அது நாடோடிகள் படத்துல அந்த சீனுல தெரியுதுன்னு சொன்னார். ஆனா எனக்கு அதுதான் தேவை. முதல்ல வருகிற அந்த மூன்று ஆடியன்ஸ் தான் எனக்கு தேவை. அவங்களுக்காக சில விஷயம் பண்ண வேண்டியிருக்கு. கங்குவா படம் அப்போ சூர்யாவை பிடிக்கலானாலும் பரவால்ல. அவர் வச்சி செஞ்சிட்டாங்க .அவரு நெறைய நல்ல விஷயங்களை பண்ணிருக்காரு” என்று கூறியுள்ளார்”
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…
தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…
பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…