இன்றைய காலகட்டத்தில் சினிமா ரசிகர்களானாலும் மக்கள் ஆனாலும் எந்த படம் வெளியில் வந்தாலும் அது சிறிய பட்ஜெட் பெரிய பட்ஜெட் சிறிய நடிகர் பெரிய நடிகர் என்ற வேறுபாடு காட்டாமல் எந்த படத்திற்கு கதை நன்றாக இருக்கிறதோ திரைக்கதை நன்றாக இருக்கிறதோ அதற்கு மக்கள் ஆதரவளித்து வருகிறார்கள். அந்த வகையில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு தற்போது அமோக வரவேற்பு பெற்று வரும் திரைப்படம் தான் ஜோஜூ ஜார்ஜ் இயக்கி நடித்த திரைப்படம் பணி. மலையாளத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் பழி வாங்கும் படலத்தை மிகவும் விறுவிறுப்புடன் திரில்லிங்காக உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் உடன் நாடோடிகள் பட புகழ் அபிநயா, சாகர் சூர்யா, மற்றும் ஜூனைஸ் ஆகியோர் தங்களது நடிப்பால் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்கள். நடிப்பை காட்டிலும் உடல் மொழி மற்றும் பார்வையின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் காட்டியிருக்கிறார் ஜோஜு ஜார்ஜ்.
இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் இளைஞர்களின் மீது ஒரு அருவருப்பு கோபம் வரும் அளவுக்கு அவர்களது நடிப்பு எதார்த்தமாக இருக்கிறது. அபிநயாவின் நடிப்பு கதைக்கு உயிர் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவு மற்றும் இசை படத்திற்கு வலு சேர்கிறது. இந்த படத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது கிளைமாக்ஸ் காட்சிகள் தான். இந்த கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் சீட்டின் நுனியில் இருந்து பார்க்க வைப்பது போல் இருந்திருக்கிறது மற்றும் பழிவாங்கல் போன்ற படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இது ட்ரீட்டாக இருக்கலாம். தற்போது ஓடிடியில் பல மொழிகளில் ரிலீஸ் ஆகி இருக்கும் இந்த திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும், தற்போது மலையாள சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த PANI திரைப்படம், இதன் காரணமாக மற்ற மொழிகளை சார்ந்தவர்களும் இந்த படத்தினை பார்க்க ஆர்வம் கட்டி வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…
சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம்…
அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரானுக்கு எதிரான போரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மொசாட் ஏஜென்ட் 'M'…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் முழுமையாகக் தணியாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி…
சினிமா உலகில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் 'ஃபேவரைட்' லிஸ்டில் இருப்பவர்கள் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்.…
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில்…