பீகார் அரசு நிலத்தின் குறைந்தபட்ச மதிப்புப் பதிவேட்டை மாற்றியமைத்துள்ளதால், ஜூன் 19 முதல் நகர்ப்புற, கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலப் பதிவுக் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. இந்த மண்டல வாரியான மாற்றத்தின்படி, நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பதிவுக் கட்டணங்கள் சுமார் 2 மடங்கும், கிராமப்புறங்களில் 1.6 மடங்கும் அதிகரித்துள்ளன. மேலும், முத்திரைத்தாள் கட்டணம் 6%-லிருந்து 7%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மதிப்பு உயர்வால் வங்கிகள் சொத்துக்களின் மீது அதிக கடன் வழங்க வாய்ப்புள்ளதோடு, நில ஆவணங்களில் வெளிப்படைத்தன்மை அதிகரித்து முறைகேடுகள் குறையும் என பீகார் அரசு நம்புகிறது.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், முத்திரைத்தாள் கட்டணம் சந்தை மதிப்பை விட குறைவாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதால், இங்கும் விரைவில் கட்டண உயர்வு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த 2023ஆம் ஆண்டில் 100 ரூபாய் முத்திரைத்தாள் 1000 ரூபாயாகவும், 20 ரூபாய் முத்திரைத்தாள் 200 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனினும், பீகாரைப் போல உடனடியாக இங்கு 2 மடங்கு கட்டண உயர்வு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
பீகாரில் சொத்துக்களின் குறைந்தபட்ச சந்தை மதிப்பு மிகக் குறைவாக இருந்ததால் தற்போது அங்கு இரு மடங்கு வரை கட்டணம் உயர்ந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் ஏற்கனவே பல பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு சந்தை மதிப்புக்கு நிகராகச் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் தற்போது நிலப் பதிவுக் கட்டணம் 11% ஆக இருப்பதாலும், சமீபத்தில்தான் சேவை கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாலும், உடனடியாக பொதுவான நிலப் பதிவுக் கட்டணங்கள் மேலும் உயர்வதற்கு வாய்ப்பில்லை என்று துறை சார்ந்த நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.
பெங்களூரில் வியாழக்கிழமை காலை 9.15 மணியளவில் 26 வயதான மதுமிதா என்ற செவிலியர் மீது அவரது கணவர் வெங்கடேஷ் என்பவர்…
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷஹர் மாவட்டத்தில், 51 ஆண்டுகள் தம்பதியாக வாழ்ந்த 70 வயது மூதாட்டிக்கும் 75 வயது முதியவருக்கும் இடையே…
திமுக கூட்டணியில் தேமுதிக இணைக்கப்பட்டது குறித்தும், அவர்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறித்தும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசிய…
மழையின் மெல்லிய சாரலும் குளிர்ந்த காற்றும் பால்கனி அமர்வை இதமாக்கிக் கொண்டிருந்த வேளையில், எதிரே இருந்த கட்டிடத்தின் 9வது மாடியில்…
17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில், தவெக அரசு செய்த…
சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நாடாளுமன்ற…