2024 பெண்கள் IPL தொடருக்கான கிரிக்கெட் மேட்ச் மிக விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் தீவிரமான கடும் போட்டியில் ஈடுபட்டிருந்தார்கள். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிபர் ஆன நீத்தா அம்பானி அவர்கள் தனது டீம் விளையாடும் மோசமான செயலை பார்த்து மனம் விழுந்து விட்டார்கள். கடந்த வருடம் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி தற்போது தகுதி நீக்க போட்டியுடன் வெளியேறியது.
முதல் பேட்டிங்கை கையில் எடுத்த ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி 49 ரன்களுக்கே 4 விக்கெட்டை இழந்து தவித்து வந்தது, அந்த சமயத்தில் எல்லிஸ் பெரிஸ் 50 பந்துகளுக்கு 66 ரன்கள் எடுத்து தன் அணியை கரை சேர்த்தார். அடுத்ததாக 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டை இழந்து 135 ரன்களை சேர்த்தது ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி.
அடுத்த சேசிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக ஆடாமல் நிதானமாக மேட்சை ஆரம்பித்தார்கள். 17 ஓவர் முடிந்து மூன்று விக்கெட்டை இழந்து 116 ரன்களை எடுத்து முன்னிலையை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். கடைசி மூன்று ஓவர்களில் 18 எடுத்தால் வெற்றி அடையும் நிலையில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, எப்படியும் ஜெயிச்சு விடுவார்கள் என்று நினைத்த ரசிகர்கள்.
கடைசி இருந்த 3 ஓவர்களில் ஒவ்வொரு பந்துக்கும் ஒரு ரன் அடித்திருந்தால் கூட வென்றிருக்கலாம். ஆனால் 20 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்து 5 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியை தழுவியது. யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு RCB பெண்கள் அணி முதல்முறையாக கப்பை வென்றுள்ளது. இதைக் கண்ட ரசிகர்கள் மாபெரும் கொண்டாட்டத்தில் ஆரவாரம் காட்டி வருகிறார்கள்.