Categories: சினிமா

7 ஆண்டுகளுக்கு பின் அதே அவதாரம்.. கச்சிதமாக ஸ்கெட்ச் போடும் தனுஷ்.. பயங்கர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

Spread the love

பிரபல நடிகரான தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக தனுஷ் ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இது தனுஷின் ஐம்பதாவது படமாகும். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை தனுஷே இயக்கி நடிக்கிறார்.

இதில் துஷாரா விஜயன், சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராயன் திரைப்படம் வடசென்னை கதைக்களமாக வைத்து உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. இப்போது போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர் ரகுமான் ராயன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் பாடல்களும் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் படம் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்பட்டது. அதன் பிறகு ரிலீஸ் ஜூன் மாதத்திற்கு தள்ளிப் போகி இப்போது ஜூலை மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவித்துள்ளனர் வருகிற ஜூலை மாதம் 26-ஆம் தேதி ராயன் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இயக்குனராகவும் தனது பயணத்தை தொடரும் தனுஷ் அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என பெயரிடப்பட்ட படத்தை இயக்க உள்ளார்.

அந்த படத்தை வொண்டர் பார் நிறுவனத்தின் சார்பில் அவரே தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார். இதற்கிடையே சேகர் கமுலாவின் இயக்கத்தில் உருவாகும் குபேரா படத்திலும் தனுஷ் நடிக்கிறார். இந்த மாதத்துடன் அந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைய உள்ளது. அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தனுஷ் இயக்கி நடிக்கும் இரண்டாவது படம் தான் ராயன். முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு தனுஷ் ப.பாண்டி என்ற படத்தை இயக்கி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

admin

Recent Posts

“திருட வந்தது ஒரு குத்தமாடா”… திருடர்களுக்கு கொடுக்கப்பட்ட வினோத தண்டனை… கனவுல கூட நினைச்சிருக்க மாட்டாங்க… இணையத்தை கலக்கும் வீடியோ…!

இந்தோனேசியாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், தொடர் திருட்டுகளால் கடுப்பாகிப் போயிருந்த பொதுமக்கள் நள்ளிரவில் கடையொன்றுக்குள் புகுந்த நான்கு கொள்ளையர்களைக்…

10 seconds ago

இனி ரேஷன் கடைக்கு போக வேண்டாம்… சென்னைவாசிகளுக்கு அரசு கொடுத்த செம சர்ப்ரைஸ்… உடனே தேதி நோட் பன்னிவச்சுகோங்க…!

தமிழக முதலமைச்சரின் "தாயுமானவர் திட்டத்தின்" கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று…

6 minutes ago

“ஆதரவை விலக்கிக்கிட்டு தாராளமா போங்க…!” கூட்டணிக் கட்சிகளுக்கு முதல்வர் விஜய் கொடுத்த ‘மரண மாஸ்’ பதிலடி..! அதிர்ச்சியில் உறைந்த தமிழக அரசியல்…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, கூட்டணி கட்சிகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடர், நிர்வாக…

8 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… குஜராத்தில் பைக்கருக்கு நேர்ந்த பயங்கரம்… மழைநீருக்குள் மறைந்திருந்த எமன்…!

குஜராத் மாநிலம் ஜுனாகத் பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், தம்பதியர் இருவர் தங்களது மோட்டார்…

8 minutes ago

“கூட்டணிக்கு குட்பை…? “திமுக தனித்துப் போட்டி…?! ஸ்டாலினின் அதிரடி முடிவு… தமிழக அரசியலில் உடையும் மாபெரும் கூட்டணி…!!”

தமிழக அரசியல் களத்தில் கூட்டணிகள் வேகமாக மாறிவரும் நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்காமல்…

16 minutes ago

“அடி தாங்க மாட்டீங்க”… சவால் விட்ட மாணிக்கம் தாகூர்… “நீங்க இன்னும் ICU-ல தான் இருக்கீங்க”… கிழித்துத் தொங்கவிட்ட திமுக எழிலரசன்…!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக, காங்கிரஸ் இடையேயான கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான…

17 minutes ago