நடிகர் ரவி மோகன் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்து வரும் சோதனைகள் மற்றும் இணையதள விமர்சனங்கள் குறித்து முதல்முறையாக ஆவேசமாகவும் வேதனையுடனும் பேசியுள்ளார். “நான் இத்தனை காலம் அமைதியாக இருந்தது முட்டாள்தனம் என இப்போது நினைக்கிறேன். நான் எப்போதும் விட்டுக் கொடுப்பவன் தான், ஆனால் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ள அவர், மறைமுகமாகத் தாக்குபவர்கள் தன் அலுவலகத்திற்கே நேரடியாக வந்து மோதலாம் என்றும் சவால் விடுத்துள்ளார்.
தொடர் அவமானங்களால் மனமுடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ரவி மோகன், இனி தியேட்டர்களில் தனது படங்கள் வெளியாகாது என்றும், சைபர் புல்லியிங் (Cyber Bullying) மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சீராகும் வரை நடிப்பில் இருந்து தற்காலிகமாக விலகப் போவதாகவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். திரையுலகில் 23 ஆண்டுகள் இரவு பகலாக உழைத்து, 95 சதவீத வெற்றப் படங்களைக் கொடுத்துள்ள தனக்கு, இரண்டாவது படத்திலேயே மாநில அரசு விருதும், கலைமாமணி விருதும் கிடைத்தது என்பதை உருக்கத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார். தனது சாதனைகள் தனக்கும் தன் ரசிகர்களுக்கும் மட்டுமே வெளிச்சம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தனது முன்னாள் மனைவி ஆர்த்தியுடனான திருமணம் குறித்துப் பேசிய அவர், “ஆர்த்தி வேண்டாம் என்று என் பெற்றோர் எவ்வளவோ தடுத்தும் நான் தான் கேட்காமல் திருமணம் செய்துகொண்டேன். எங்களுடைய திருமணப் புகைப்படங்களைப் பார்த்தாலே என் பெற்றோர் எவ்வளவு வருத்தத்துடன் அட்சதை போட்டார்கள் என்பது அனைவருக்கும் புரியும். என்னுடன் வாழ்ந்த காலத்தில் என்னை கடவுளாகக் கொண்டாடியதோடு, பல பேட்டிகளில் என்னை பெருமையாகப் பேசியவருக்கு அப்போது பெண்ணியம் (Feminism) தெரியவில்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தனது குழந்தைகளைப் பார்க்கக் கூட விடாமல், பள்ளிக்கு பாடிகார்டுகளை அனுப்பித் தடுப்பதாகக் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டியுள்ளார்.
இறுதியாக, தனது குடும்பச் சிதைவுக்குக் காரணமான ஒரு முக்கியப் புள்ளியைப் பற்றிப் பெயரைக் குறிப்பிடாமல் ரவி மோகன் கடுமையாக விமர்சித்துள்ளார். “திரையுலகில் எத்தனையோ அழகான கதாநாயகிகளுடன் நான் பணியாற்றியிருக்கிறேன். அப்போதெல்லாம் எந்தத் தவறும் செய்யாத நான், இப்போதா தடம் மாறுவேன்? மூன்றெழுத்து கொண்ட அந்த ‘இட்லி நடிகை’ தான் எனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் கெடுத்தார். என்னை பற்றிப் பேசுவதற்கு அவருக்கு எந்தவொரு தகுதியும் அருகதையும் கிடையாது” என மிகக் காரசாரமாகத் தன் சாடலை முடித்துள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) மீண்டும் உள்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…
இந்தியப் பெண்கள் தங்களின் பாரம்பரியச் சடங்குகளில் எந்தவொரு சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்வதில்லை என்பதற்கு உதாரணமாக ஒரு விநோதமான நிகழ்வு…
தற்போது தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி விவாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் கோபிநாத் தொகுத்து வழங்கும்…
ஜெயம் ரவி - ஆர்த்தி மற்றும் பாடகி கெனிஷா இடையேயான விவகாரம், கெனிஷா மற்றும் ஆர்த்தியின் அடுத்தடுத்த சமூக வலைதளப்…
ஜெயம் ரவி - ஆர்த்தி மற்றும் பாடகி கெனிஷா இடையேயான குடும்பப் பிரச்சனை தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
தமிழகத்தில் ஊழல் புகாரில் சிக்கியுள்ள திமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேரை விரைவில் கைது செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத்…