“எனக்கு ரத்த வாந்தி வந்ததுக்கு அவங்கதான் காரணம்!”… ரவி மோகன் போட்டு உடைத்த பகீர் உண்மை…!!!

Spread the love

ஜெயம் ரவி – ஆர்த்தி மற்றும் பாடகி கெனிஷா இடையேயான குடும்பப் பிரச்சனை தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு திருமணமான இந்த தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து வரை சென்றனர். இதற்கிடையில், ரவி பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாக இருப்பதாகப் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், நேற்று கெனிஷா வெளியிட்ட வீடியோவில், தான் ரவியின் குடும்பத்தைப் பிரிக்கவில்லை என்றும், அவரை முழு சுதந்திரத்துடன் வழியனுப்பி வைத்துவிட்டு சென்னையிலிருந்து நிரந்தரமாக வெளியேறுவதாகவும் கூறி அதிர்ச்சி தந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஆர்த்தி ரவி, “தூங்கும் தாய் சிங்கத்தை எழுப்ப வேண்டாம்; என் குழந்தைகளையும் கண்ணியத்தையும் காக்க உண்மைகளோடு உலகை எதிர்கொள்வேன்” எனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தத் தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) இன்று செய்தியாளர்களைச் சந்தித்துத் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார். தான் மிகவும் கஷ்டப்பட்டு, 104 டிகிரி காய்ச்சலிலும் நடித்து இந்த நிலைக்கு வந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஒரு ‘இட்லி நடிகை’ தன்னைப்பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அந்த நடிகையால் தன் குடும்பமே நாசமாகப் போகவிருந்ததாக மூன்று சீனியர் நடிகர்கள் தன்னிடம் எச்சரித்ததாகவும் ரவி செய்தியாளர்களிடம் ஓப்பனாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய ரவி, தனக்கு ரத்த வாந்தி வந்ததாகவும், தன்னைத் தங்கள் பேச்சைக் கேட்க வைக்க ‘பிளாக் மேஜிக்’ (பில்லி சூனியம்) செய்யப்பட்டதாகவும் கூறி அதிர வைத்துள்ளார். வீட்டில் தனக்கு அடிப்படை மரியாதை கூட கிடைக்கவில்லை என்றும், வேலை முடிந்து வந்தால் நிம்மதியே இல்லை என்றும் வேதனைப்பட்டுள்ளார். மேலும், ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் போலியான ஆதாரங்களை உருவாக்கித் தன் இமேஜை அழிக்கப் பார்ப்பதாகவும், ஆனால் தன்னிடம் உண்மையான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறிய அவர், கடந்த இரண்டு வருடங்களாகத்தான் தான் நிம்மதியாக இருந்ததாகத் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

Muthu Mani

Recent Posts

அடேயப்பா..! ரூ.1 லட்சம்… இப்போ ரூ.14 கோடி.. 24 வருஷத்துல லைஃபே செட்டிலான மேஜிக் பங்கு எது தெரியுமா?

பங்குச் சந்தையில் சரியான நேரத்தில் செய்யப்படும் முதலீடு மிகப்பெரிய செல்வத்தை உருவாக்கும் என்பதற்கு 'இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்' நிறுவனம் ஒரு…

8 minutes ago

“அவன் ஒரு போலியான ஆள்..!” நடிகர் சூரியின் முகத்திரையைக் கிழித்த உயிர் நண்பன்… பின்னணியில் இவ்வளவு துரோகமா?… உச்சக்கட்ட அதிர்ச்சியில் கோலிவுட்…!!!

பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சூரி தனக்குத் திரைத்துறையில் தொடக்க காலத்தில் உதவிய நண்பர்களைப் பேட்டிகளில் பெருமையாகப் பேசி,…

16 minutes ago

வாரணாசியில் அதிரடி.. காசி விஸ்வநாத் கோயில் சாலை விரிவாக்கத்திற்காக 6 மசூதிகள் இடமாற்றம் – 187 சொத்துக்கள் பாதிப்பு..!!

வாரணாசியில் உள்ள லஹுராபீர்-கோதௌலியா பாதையிலிருந்து புகழ்பெற்ற காசி விஸ்வநாத் கோயிலின் 4-வது நுழைவாயில் வரை மக்கள் எளிதாகச் சென்று வர…

18 minutes ago

“காங்கிரஸ், விசிகவுக்கு அந்த மேஜர் துறைகளா?”… கூட்டணிக்கு 8 இடங்கள்… கசிந்தது புதிய அமைச்சரவை லிஸ்ட்.. கோட்டையை அதிரவைத்த முதல்வர் விஜய்…!!!

தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், அடுத்த 3 நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம் முழு…

27 minutes ago

“வாழ்க்கைப் போரில் தோற்றுவிட்டேன்… என் மனைவிதான் காரணம்”: கோரக்பூர் காட்டில் தூக்கில் தொங்கிய சாப்ட்வேர் இன்ஜினியர் – வாட்ஸ்அப் வீடியோவால் பரபரப்பு..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், தனது மனைவியின் தொடர் கொடுமைகளால் மனமுடைந்த பிரத்யும்ன் யாதவ் (33) என்ற மென்பொருள் பொறியாளர்,…

27 minutes ago

எம்.எல்.ஏ குடும்பத்திற்கே இந்த நிலையா? அதிகாலை வாக்கிங் சென்றபோது பாய்ந்து வந்த பைக் ஆசாமிகள்: சிசிடிவியில் சிக்கிய சங்கிலி பறிப்பு பகீர் காட்சிகள்..!

பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் உள்ள கங்கபாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதைக் காட்டும்…

28 minutes ago