“தூங்குற தாய் சிங்கத்தை எழுப்பாதீங்க!”… கெனிஷாவின் கண்ணீர் வீடியோவுக்கு ஆர்த்தி ரவி கொடுத்த மரண மாஸ் வார்னிங்…!!!

Spread the love

ஜெயம் ரவி – ஆர்த்தி மற்றும் பாடகி கெனிஷா இடையேயான விவகாரம், கெனிஷா மற்றும் ஆர்த்தியின் அடுத்தடுத்த சமூக வலைதளப் பதிவுகளால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவியை பிரிந்த பிறகு ஆர்த்தி தனது இரண்டு மகன்களை வளர்க்கும் பொறுப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே, ரவியுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறப்பட்ட பாடகி கெனிஷா திடீரென இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு 18 வயதிலேயே திருமணம் நடந்து, கணவரின் தாக்குதலால் 4 மாதக் கரு கலைந்து, அனைத்தையும் இழந்த தான் எப்படி ரவியின் குடும்பத்தைக் கெடுக்க நினைப்பேன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ரவி ஒன்றும் குழந்தை இல்லை என்றும், அவர் தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கத் தெரிந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில், ஒரு மனிதரைக் காப்பாற்றத் தன்னைத் தானே தியாகம் செய்ததாகக் குறிப்பிட்ட கெனிஷா, இந்த உலகம் பொய் சொல்பவர்களுக்கே இடம் தருகிறது என்று வேதனைப்பட்டுள்ளார். “இனி அவர் உங்கள் சொத்து, அவருக்காக நான் போராடப் போவதில்லை; முழு விடுதலையுடன் அவரை வழியனுப்புகிறேன்” என்று கூறிய அவர், தன் மீதான இணையத் தாக்குதல்களால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதால் இசை மற்றும் தெரபி பணிகளில் இருந்து விலகி, சென்னையை விட்டே நிரந்தரமாக வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இவரின் இந்த உருக்கமான பதிவைப் பார்த்த ரசிகர்கள், ரவி – கெனிஷா இடையேயான உறவு முற்றிலும் முறிந்துவிட்டதாக (Break-up) உறுதி செய்துள்ளனர்.

கெனிஷாவின் இந்த அதிரடி வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, ரவியின் முன்னாள் மனைவி ஆர்த்தி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வலுவான பதிலடியைக் கொடுத்துள்ளார். “தூங்கிக்கொண்டிருக்கும் தாய் சிங்கத்தை ஒருபோதும் எழுப்பக்கூடாது; என்னுடைய கண்ணியமான அமைதியைப் பலவீனமாக நினைக்க வேண்டாம்” என்று எச்சரித்துள்ளார். மேலும், தேவைப்பட்டால் தன் குழந்தைகளையும் கண்ணியத்தையும் காப்பாற்றத் தனது வசதியான வட்டத்திலிருந்து வெளிவந்து, உண்மையுடன் இந்த உலகத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டு, “உண்மை எப்போதும் வெல்லும்” என்றும் ஆர்த்தி பதிவிட்டுள்ளார். யார் பெயரையும் அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், இது கெனிஷாவின் வீடியோவுக்குக் கொடுக்கப்பட்ட நேரடிப் பதிலடி என்றே திரைத்துறையில் பேசப்படுகிறது.

Muthu Mani

Recent Posts

அடேயப்பா..! ரூ.1 லட்சம்… இப்போ ரூ.14 கோடி.. 24 வருஷத்துல லைஃபே செட்டிலான மேஜிக் பங்கு எது தெரியுமா?

பங்குச் சந்தையில் சரியான நேரத்தில் செய்யப்படும் முதலீடு மிகப்பெரிய செல்வத்தை உருவாக்கும் என்பதற்கு 'இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்' நிறுவனம் ஒரு…

15 minutes ago

“அவன் ஒரு போலியான ஆள்..!” நடிகர் சூரியின் முகத்திரையைக் கிழித்த உயிர் நண்பன்… பின்னணியில் இவ்வளவு துரோகமா?… உச்சக்கட்ட அதிர்ச்சியில் கோலிவுட்…!!!

பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சூரி தனக்குத் திரைத்துறையில் தொடக்க காலத்தில் உதவிய நண்பர்களைப் பேட்டிகளில் பெருமையாகப் பேசி,…

22 minutes ago

வாரணாசியில் அதிரடி.. காசி விஸ்வநாத் கோயில் சாலை விரிவாக்கத்திற்காக 6 மசூதிகள் இடமாற்றம் – 187 சொத்துக்கள் பாதிப்பு..!!

வாரணாசியில் உள்ள லஹுராபீர்-கோதௌலியா பாதையிலிருந்து புகழ்பெற்ற காசி விஸ்வநாத் கோயிலின் 4-வது நுழைவாயில் வரை மக்கள் எளிதாகச் சென்று வர…

24 minutes ago

“காங்கிரஸ், விசிகவுக்கு அந்த மேஜர் துறைகளா?”… கூட்டணிக்கு 8 இடங்கள்… கசிந்தது புதிய அமைச்சரவை லிஸ்ட்.. கோட்டையை அதிரவைத்த முதல்வர் விஜய்…!!!

தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், அடுத்த 3 நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம் முழு…

33 minutes ago

“வாழ்க்கைப் போரில் தோற்றுவிட்டேன்… என் மனைவிதான் காரணம்”: கோரக்பூர் காட்டில் தூக்கில் தொங்கிய சாப்ட்வேர் இன்ஜினியர் – வாட்ஸ்அப் வீடியோவால் பரபரப்பு..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், தனது மனைவியின் தொடர் கொடுமைகளால் மனமுடைந்த பிரத்யும்ன் யாதவ் (33) என்ற மென்பொருள் பொறியாளர்,…

33 minutes ago

எம்.எல்.ஏ குடும்பத்திற்கே இந்த நிலையா? அதிகாலை வாக்கிங் சென்றபோது பாய்ந்து வந்த பைக் ஆசாமிகள்: சிசிடிவியில் சிக்கிய சங்கிலி பறிப்பு பகீர் காட்சிகள்..!

பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் உள்ள கங்கபாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதைக் காட்டும்…

34 minutes ago