திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆய்வு செய்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அங்குள்ள அர்ச்சகர்களை இழிவுபடுத்திவிட்டதாக முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உண்மையாகப் பெரியாரைப் பின்பற்றுபவர்கள் தங்களுக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போட்டுக் கொள்ளும் வழக்கம் கொண்டிருக்க மாட்டார்கள் என்று அனிதா ராதாகிருஷ்ணனை அவர் நேரடியாகச் சாடியுள்ளார்.
மக்களைச் சுரண்டிப் பிழைப்பது யாராக இருந்தாலும், சாதி மதப் பாகுபாடின்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத்தான் மக்கள் தங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பக்தர்களிடம் சட்டத்திற்குப் புறம்பாகப் பணம் பெற்றுக்கொண்டுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் அர்ச்சகர்களுக்கு இல்லை என்றும், அப்படிச் செய்வது உண்மையான சேவை கிடையாது எனத் தெரிவித்த அவர், எந்தக் கடவுளும் அப்படிச் செய்யச் சொல்லவில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாகப் பேசிவிட்டு, இன்று அதே சாதியைச் சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாகக் கூறுவது ஏன் என்று அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். தவறு செய்தவர்களைத் தண்டிக்கும்போது உங்களுக்கு ஏன் திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்று வினவியுள்ள அவர், திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வரும் மேலும் பல முறைகேடுகளை விரைவில் வெளிக்கொண்டு வரப்போவதாகவும், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த நீட்டிப்பு மற்றும் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில்…
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நேரில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள நெடுமங்காடு பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித் தொடர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த…
அகமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர், திருச்சி,…