பாமகவில் மீண்டும் பரபரப்பு…! “ராமதாஸ்க்கு அதிகாரம் இல்லை”… வழக்கறிஞர் கே.பாலு அதிரடி..!!

Spread the love

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணிக்கு இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. இந்தசூழலில் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதியன்று  தைலாபுரம் தோட்டத்தில் அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூடியது. அதில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் விளக்கமளிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து மீண்டும் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி விளக்கமளிக்க, ராமதாஸ் கெடு விதித்திருந்தார்.

ராமதாஸ் விதித்த கெடு  நேற்றோடு நிறைவடைந்தது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கெடுவில் அன்புமணி அதற்கு விளக்கமளிக்கவில்லை. தற்போது, மீண்டும் கெடு விதித்தும் அதை அன்புமணி கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.   அன்புமணி மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கும் இரண்டு முறை அவகாசம் அளித்து பதிலளிக்காததால், அவை உண்மையானதே, சரியானதே என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனால் அவரை அக்கட்சியின் பாமக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் பாமகவின் கட்சி விதிகளின்படி கட்சியின் நிறுவனருக்கு நிர்வாகப்பணிகளை மேற்கொள்ளவதற்கு அதிகாரம் இல்லை. எந்த முடிவாக இருந்தாலும் பொதுக்குழுவாள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கே அதிகாரம் உள்ளது என்று வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

1 minute ago

“பாஜகவை விட்டு ஓடியவர்கள் ஓடோடி வராங்க.. நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அந்த ‘மாஸ்’ அறிவிப்பு.. அதிரும் தமிழக அரசியல்”..!!

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்…

2 minutes ago

“பகீர் சம்பவம்…! சொகுசு குடியிருப்பில் சொந்த ஊழியரையே கொடூரமாகக் கொலை செய்த டாக்டர்… டெல்லியில் பரபரப்பு…!”

டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள மவுண்ட் கைலாஷ் குடியிருப்புப் பகுதியில், மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் நீண்ட நாட்களாக…

16 minutes ago

ரயில் டிக்கெட் விலையில் 75% வரை தள்ளுபடி.. இந்திய ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?.. இதோ முழு விபரம்..!!

அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவான பயணத்தை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மாற்றுத்திறனாளிப்…

23 minutes ago

நெஞ்சை உலுக்கும் பயங்கரம்…! நடுவானில் 20 மீட்டர் உயரத்தில் தவித்த இளைஞர்கள்… தலைகீழாக மாறிய சுற்றுலா…!!

ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள தூத் தாலாய் பகுதியில், பலத்த காற்று காரணமாக இரண்டு நண்பர்கள் ஜிப் லைனில் 20…

25 minutes ago

மும்பையிலேயே மராத்திக்கு அவமரியாதையா…? ரயில் நிலையத்தில் பயணியிடம் சீறிய ஊழியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தகவல் மையத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கும், ஒரு பயணிக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம்…

32 minutes ago