“அமைச்சருக்கு வந்த திடீர் போன் கால்”…. சத்தியபாமா காதில் சொன்ன ரகசியம் என்ன?….. பின்னணியை உடைத்த ராஜ்மோகன்…!

Spread the love

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சார களத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் காதில் என்ன பேசப்பட்டது என்ற சர்ச்சை குறித்து அமைச்சர் ராஜ்மோகன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கமளித்துள்ளார். மக்கள் பல மணி நேரமாக காத்திருந்ததால், நேரத்தை மனதில் கொண்டு “வேகமாக விஷயத்தை சொல்லி முடிங்கள், முதல்வர் விஜய்யும் பேச வேண்டும்” என்று மட்டுமே கூறியதாகத் தெரிவித்தார். திமுக மற்றும் அதிமுகவினர் விமர்சிப்பது போல அங்கு எந்த நாடகமும் நடக்கவில்லை என்றும், வெறும் அரசியல் கற்பனைகளுக்காகவே இத்தகைய தவறான செய்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அதிமுகவிலிருந்து விலகி மாற்றுத் கட்சியினர் தவெகவில் இணைவது குறித்துப் பேசிய அவர், யாரையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் தவெகவுக்கு இல்லை என்றார். நல்ல தலைமையான விஜய் தலைமையில் இணைந்து மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடனேயே பலரும் விருப்பப்பட்டு வருகிறார்கள் எனக் குறிப்பிட்டார். மேலும் பட்டினப்பாக்கத்தில் இடிக்கப்பட்ட கட்டிடம் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியிருந்ததாகவும், மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே அப்பகுதியில் புதிய அரசுப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.

சமீபத்தில் தாராபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் சத்தியபாமா பேசிக்கொண்டிருந்தபோது, ராஜ்மோகன் காதில் ஏதோ கூறியதைத் தொடர்ந்து சத்தியபாமா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டுப் பேசினார். தன்னை பெண் என்றும் பாராமல் அசிங்கமாகப் பேசுவதாக அவர் அழுது புலம்பியபோது, விஜய் அவருக்கு நேரில் ஆறுதல் கூறினார். இச்சம்பவத்தை சுட்டிக்காட்டிய திமுக எம்பி கனிமொழி மற்றும் அதிமுக நிர்வாகி இன்பதுரை ஆகியோர், தொகுதியில் மக்கள் எதிர்ப்பு அதிகமாக இருப்பதை உணர்ந்து அனுதாப அலை உருவாக்குவதற்காகவே ராஜ்மோகன் வழிகாட்டுதலில் இந்த அழுகாச்சி நாடகம் நடத்தப்பட்டுள்ளதாக கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இத்தகைய அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளித்த ராஜ்மோகன், மக்கள் எழுச்சியே கள நிலவரத்தை வெளிப்படுத்துவதாகக் கூறினார். தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதி இடைத்தேர்தல்களிலும் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என உறுதியளித்தார். மீனவர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்து, முதல்வர் விஜய்யின் வழிகாட்டுதலின்படி தவெக தொடர்ந்து மக்கள் பணியாற்றும் என்றும் அவர் தன் பேச்சில் சுட்டிக்காட்டினார்.

Nanthini

Recent Posts

அம்மாடியோ… இந்த காலத்துல இப்படி ஒரு மருமகளா?… நடக்க முடியாத மாமனாரைத் தோளில் சுமந்து சென்ற பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!

நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…

6 மணத்தியாலங்கள் ago

இது பள்ளியா?… இல்ல சித்திரவதைக் கூடமா?… 3 வயது பிஞ்சுக் குழந்தையை… கயிற்றால் கட்டித் தாக்கிய ஆசிரியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… உயிருள்ள பாம்பைக் கழுத்தில் சுற்றி சாகசம்… பூஜையின் போது கடித்ததில் பிரபல… பாம்பு பிடிப்பவர் பரிதாப பலி…!

மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…

7 மணத்தியாலங்கள் ago

பலமுறை நடந்த கொடூரம்… வெளிவந்த உண்மை… சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்… நீதிமன்றம் எடுத்த முடிவு என்ன தெரியுமா?…!!

ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…

7 மணத்தியாலங்கள் ago

என் கணவனுடனா பழகுகிறாய்?… உன்னை உயிரோடு விடமாட்டேன்… ரூ 13 லட்சம் கூலிப்படையை ஏவி… தோழியைத் தீர்த்துக்கட்டிய மனைவியின் வெறிச்செயல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…

7 மணத்தியாலங்கள் ago

கடவுளே… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?… வீட்டு வாசல் சாக்கடைக்குள் விழுந்த வியாபாரி… காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…

7 மணத்தியாலங்கள் ago