ரூ.100 கோடி பள்ளி அங்கீகார ஊழல்…. அன்பில் மகேஷை வளைத்த அமலாக்கத்துறை… சிக்கிய ரகசிய சான்றுகள்….!

Spread the love

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், தடையில்லாச் சான்றிதழ்களைப் (NOC) பெறவும் 100-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளிடம் இருந்து சுமார் ரூ.100 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டதாகத் தமிழ்நாடு தனியார் பள்ளி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தீவிரக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், முதற்கட்டமாக பி.டி. அரசகுமார் என்பவரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கைதான நபரிடம் நடத்தப்பட்ட விசாரணை, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் மின்னணுச் சான்றுகளின் அடிப்படையில், அன்றைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பெயர் இந்த வழக்கில் முதன்மையாகச் சேர்க்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லம் மற்றும் அவருக்குத் தொடர்புடைய பல்வேறு இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தச் சோதனையின் முடிவில், வழக்கு தொடர்பாக 118 முக்கிய ஆவணங்கள், 18 கைபேசிகள், 3 மடிக்கணினிகள், ஹார்டு டிஸ்க்குகள் பொருந்திய 2 கணினிகள் மற்றும் பல்வேறு வங்கிச் காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சான்றுகளின் அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட சம்மனை ஏற்று, கடந்த 18-ஆம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரான அன்பில் மகேஷிடம் அதிகாரிகள் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள எஃப்.ஐ.ஆர் (FIR) மற்றும் திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், இந்த வழக்கின் பின்னணியில் உள்ள சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறையும் (ED) தற்போது தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. மத்திய குற்றப்பிரிவிடமிருந்து ஆவணங்களைப் பெற்றுள்ள அமலாக்கத்துறை, அடுத்தகட்டமாகச் சம்மன் அனுப்பி அன்பில் மகேஷிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதால் இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அம்மாடியோ… இந்த காலத்துல இப்படி ஒரு மருமகளா?… நடக்க முடியாத மாமனாரைத் தோளில் சுமந்து சென்ற பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!

நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…

6 மணத்தியாலங்கள் ago

இது பள்ளியா?… இல்ல சித்திரவதைக் கூடமா?… 3 வயது பிஞ்சுக் குழந்தையை… கயிற்றால் கட்டித் தாக்கிய ஆசிரியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…

6 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… உயிருள்ள பாம்பைக் கழுத்தில் சுற்றி சாகசம்… பூஜையின் போது கடித்ததில் பிரபல… பாம்பு பிடிப்பவர் பரிதாப பலி…!

மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…

6 மணத்தியாலங்கள் ago

பலமுறை நடந்த கொடூரம்… வெளிவந்த உண்மை… சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்… நீதிமன்றம் எடுத்த முடிவு என்ன தெரியுமா?…!!

ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…

7 மணத்தியாலங்கள் ago

என் கணவனுடனா பழகுகிறாய்?… உன்னை உயிரோடு விடமாட்டேன்… ரூ 13 லட்சம் கூலிப்படையை ஏவி… தோழியைத் தீர்த்துக்கட்டிய மனைவியின் வெறிச்செயல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…

7 மணத்தியாலங்கள் ago

கடவுளே… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?… வீட்டு வாசல் சாக்கடைக்குள் விழுந்த வியாபாரி… காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…

7 மணத்தியாலங்கள் ago