தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்பொழுது ஜெயிலர் திரைப்படம் ரிலீசாகி சக்க போடு போட்டு வருகிறது. சூப்பர் ஸ்டாருக்கு இரண்டு மகள்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவருடைய இரண்டாவது மகள் தான் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் ஒரு திரைப்பட கிராபிக் டிசைனர். ‘படையப்பா’ திரைப்படத்தின் டைட்டில் கார்டு கிராபிக்கை உருவாக்கியது இவர்தான்.
இதைத் தொடர்ந்து தனது அப்பாவின் ‘கோச்சடையான்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இவர் 2010ல் அஸ்வின் ராம்குமார் என்ற பிசினஸ்மேனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2011 இல் வேத் என்ற மகன் பிறந்தார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2016 விவாகரத்து பெற்றனர்.
தனது தந்தையின் திரைப்படம் அல்லாமல் இவர் சண்டைக்கோழி ,மஜா, சென்னை 28 , குசேலன், சிவகாசி போன்ற படங்களிலும் கிராபிக் டிசைனராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் விசாகன் வணங்காமுடி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இந்த தம்பதிகளுக்கு அழகான மகன் பிறந்துள்ளார். தற்பொழுது இவர் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்தின் பழைய பேட்டி ஒன்று திடீரென ட்ரெண்டாகியுள்ளது. அதில் அவரிடம் ‘தனித்தீவில் இரண்டு ஆண்களுடன் வசிக்க வேண்டும் என்றால் யாருடன் வசிப்பீர்கள்?’ என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், அப்படி நிலைமை ஏற்பட்டால் இயக்குநர் சங்கர் மற்றும் இயக்குநர் ராஜமௌலி ஆகியோருடன் தனித்தீவில் வசிப்பேன் என கூறியிருந்தார். தற்பொழுது இப்பேட்டியானது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…
சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…
தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…
மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…
தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…