தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி.
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தார் .இவர் மா தொலைக்காட்சி, மா டாக்கிஸ், ஹார்ட் பீட் போன்ற தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார்.
அதன் பிறகு 2003 இல் தெலுங்கு சினிமாவில் நடிகையானார். 2010ல் சுரேகா வாணி உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதன் பிறகு இவர் எதிர்நீச்சல், ஜில்லா, மெர்சல், விஸ்வாசம், லிசா, மாஸ்டர் என பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் சுமார் 18 வருடங்களில் 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். நடிகை சுரேகா வாணி சுரேஷ் தேஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு சுப்ரிதா என்ற மகள் உள்ளார் . 2019 ஆம் ஆண்டு சுரேஷ் தேஜா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மரணம் அடைந்தார்.
தற்போது தன்னுடைய மகளுடன் சுரேகா வாணி வசித்து வருகிறார். இவர் தனது மகளின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
ஆனால் அவர் இதுவரை இதுதொடர்பாக எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியிடவில்லை.
நடிகை சுரேகாவாணி சமீபத்தில் தனது மகளின் பிறந்தநாளை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.
தற்போது தன் மகளுடன் லண்டனில் சுற்றிப் பார்த்துஅங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…