Categories: சினிமா

என்ன வில்லன் ஹீரோவ அடிக்கும் போது கைதட்டுறாங்க?… அதுதான் ரஜினி மாஸ்… எந்த படத்தில் நடந்தது தெரியுமா?

Spread the love

1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.

அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்த் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சீக்கிரமே உயிரிழக்கப் போகும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ரஜினியை சூப்பர் வில்லன் ஆக்கியது பாலச்சந்தர் இயக்கிய மூன்று முடிச்சு திரைப்படம். அதன் பிறகு ரஜினி தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் வில்லன் நடிகர் ஆனார்.

படத்தின் கதாநாயகர்களுக்கு இணையாக அவருக்கும் கைதட்டல், விசில்கள் கிடைக்க ஆரம்பித்தன. இந்த நேரத்தில் பைரவி படத்தில் கதாநாயகனாக நடித்தார் ரஜினி. அந்த படம் வெற்றி பெற்று அவரை நிரந்தரக் கதாநாயகனாக்கி விட்டது. அந்த படத்தைத் தயாரித்தது கதாசிரியர் கலைஞானம். அவருக்கு சமீபத்தில் ரஜினி ஒரு வீடு வாங்கிக் கொடுத்து நன்றிக் கடனை திருப்பி செய்தார்.

ரஜினி, தன் வில்லன் நடிப்பில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நடித்தப்படம் ‘காயத்ரி’. அதில் ஸ்ரீதேவி கதாநாயகி, ஜெய்சங்கர் ஹீரோ. வில்லன் ரஜினி. ஆனால் ரஜினி செய்யும் வில்லத்தனங்களுக்குதான் ரசிகர்கள் கைதட்டினார்களாம். ஹீரோவான ஜெய் சங்கரை ரஜினி அடிக்கும் போதெல்லாம் அவருக்குக் கைதட்டல் ஒலி பறந்துள்ளது. அப்போதே ரஜினி எதிர்காலத்தில் மாஸ் நடிகராக வரப் போகிறார் என்பதை பஞ்சு அருணாசலம் புரிந்துகொண்டு தொடர்ந்து அவருக்கு தன் படங்களில் வாய்ப்புகளைக் கொடுத்துள்ளார்.

அப்படிதான் பிரியா படத்தில் ரஜினியை ஹீரோவாக்கினார். வெளிநாடுகளில் சென்று படமாக்கினார். ரஜினி சம்பளமாக 35 ஆயிரம் ரூபாய் கேட்க, அவர் ஒரு லட்ச ரூபாய் சம்பளமாகக் கொடுத்துள்ளார். இப்படி ரஜினியின் வளர்ச்சியில் முக்கிய ஆளாக இருந்துள்ளார் பஞ்சு அருணாசலம்.

vinoth

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

6 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

6 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

6 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

7 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

7 மணத்தியாலங்கள் ago