#image_title
தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குனர்களில் வெங்கட்பிரபுவும் ஒருவர். அவர் இயக்கிய சென்னை 28, சரோஜா, மங்காத்தா மற்றும் மாநாடு ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இப்போது விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார்.
வெங்கட் பிரபு இயக்குனர் ஆவதற்கு முன்னர் அவர் ஏப்ரல் மாதத்தில் மற்றும் சிவகாசி ஆகிய படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். பின்னர் உன்னை சரணடைந்தேன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகுதான் அவர் சென்னை 28 படத்தை இயக்கினார்.
மங்காத்தா வெற்றிக்குப் பிறகு அவரை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை தயாரிக்க ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. அதில் ஒன்றில் கார்த்தியும் மற்றொன்றில் சூர்யாவும் நடித்தனர். சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய ‘மாசு என்கிற மாசிலாமணி’ திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.
இந்த படத்தின் தோல்வி குறித்து சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசும்போது பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார் வெங்கட் பிரபு. அதில் “நாங்கள் மாசு படம் என்ன மாதிரியான படம் என்பதை ரசிகர்களுக்கு சரியாக சொல்லவில்லை என்று நினைக்கிறேன். படத்தின் டைட்டிலை சில முறை மாற்றினோம். படத்தில் இடம்பெற்ற பிளாஷ்பேக் காட்சியை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம்.
நான் சூர்யா எல்லாம் ஸ்கூல்மேட்ஸ். ஒன்றாகதான் படித்தோம். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார். திடீர் திடீரெனக் கோபப்படுவார். நான் அவரிடம் சொல்வேன் ‘ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள். உங்களுக்காதான் இந்த படத்தை கஷ்டப்பட்டு எடுக்கிறோம். உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னால் மாற்றப் போகிறோம்” எனக் கேட்பேன். மற்றபடி அந்த படம் ஒரு நல்ல அனுபவம்தான்” எனக் கூறியுள்ளார்.
இதுபற்றி மேலும் பேசிய வெங்கட்பிரபு மாசு படம் தொடங்கும் போதே சிவகுமார், வெங்கட்பிரபுவிடம் “கார்த்தி மாதிரி சூர்யா ஜாலியான ஆள் இல்லடா. அவன் கொஞ்சம் கோபக்காரன்” என எச்சரிததாகவும் கூறியீருந்தார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…