#image_title
நடிகர் அஜித் தன்னுடைய கேரியரின் ஆரம்ப காலகட்டம் முதல் இப்போது வரை பிற நடிகர்களோடு பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். விஜய், விக்ரம் மற்றும் ஷாருக் கான் ஆகியோரோடு இணைந்து நடித்துள்ள தற்போது தனக்கு ஏற்றார் போன்ற மாஸ் கதைகளில் மட்டும் நடிப்பதால் பிற நடிகர்களோடு இணைந்து நடிப்பதில்லை.
தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அவருக்கென வெறித்தனமான லட்சக் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் படம் ரிலீஸ் ஆகும் நாட்களில் தியேட்டர்கள் திருவிழா கோலம் கொள்கின்றன.
அஜித்தைப் போலவே இன்று தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் ஒரு நடிகராக அறிமுகமானது அஜித் நடித்த அமர்க்களம் திரைப்படத்தில்தான். அந்த படத்தில் இடம்பெற்ற காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடுச்சுடா என்ற பாடலில் அவரின் வித்தியாசமான நடன அசைவுகள் ரசிகர்களைக் கவர்ந்தன.
அந்த பாடலில் முதலில் அஜித்தான் நடனம் ஆடுவதாக இருந்ததாம். ஆனால் லாரன்ஸின் வித்தியாசமான நடன அசைவுகளை பார்த்த அஜித்,இந்த பாடல் முழுவதும் லாரன்ஸே ஆடட்டும் என சொல்லிவிட்டாராம். அதனால்தான் அந்த பாடல் முழுவதும் லாரன்ஸ் ஆடி புகழ் பெற்றார்.
அதன் பின்னர் சிறு சிறு வேடங்களில் நடித்த லாரன்ஸ் பின்னர் முனி திரைப்படம் மூலமாக கதாநாயகனார். தொடர்ந்து சில வெற்றி படங்களைக் கொடுத்த அவர் இப்போது முன்னணி மாஸ் நடிகராக இருக்கிறார். இந்நிலையில் இப்போது அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் தான் இன்று ஹீரோவாக இருப்பதற்கு அஜித்தும் ஒரு காரணம் எனக் கூறியுள்ளார்.
அதில் “நான் இயக்குனர் ஆன பின்னர் சரண் சார் என்னிடம் அஜித்துக்கு எதாவது கதை இருக்கா மாஸ்டர் எனக் கேட்டார். நான் இருக்கு என்றதும் நேராக அவர் வீட்டுக்கே என்னை அழைத்து சென்றார். நான் கதை சொன்னதும் அஜித் சாருக்கு பிடித்தது. அவர் கதாபாத்திரத்துக்கு நிகராக என் கதாபாத்திரத்தையும் எழுத சொன்னார். அந்த படம் நடக்கவில்லை. ஆனால் நான் இப்போது இந்த நிலையில் இருக்க அஜித் சாரும், என் குரு சரண் சாரும் ஒரு காரணம்” எனக் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணிக்கான டெண்டர், ராசி பில்டர்ஸ் நிறுவனத்திற்கு…
ஆந்திரப் பிரதேசம் மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியில், தொழிலதிபர் கோட்டி வீர நாகய்யா என்பவர் திருமணமாகியும் மற்றொரு பெண்ணுடன் வசித்து…
சீனாவின் ஹெபேய் மாகாணத்தில் நடந்ததாகக் கூறி சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சி தரும் கொடூர வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. ஓட்டுநர்…
தமிழக அரசியலில் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி தவெக ஆட்சியைப் பிடித்திருக்கும் சூழலில்,…
இந்தியா போன்ற பாரம்பரியமிக்க சமூகங்களில், காதல் விவகாரங்கள் இன்னும் கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் குடும்ப மானப் பிரச்சனைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றன. அந்த…
சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம்…