தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர்களில் ஒருவர் எம் ஆர் ராதா. நாடக உலகில் சிவாஜி, எம் ஜி ஆருக்கெல்லாம் சீனியரான ராதா, 1930 மற்றும் 40 களிலேயே சில படங்களில் நடித்தாலும், நாடகம் அளவுக்கு அவருக்கு சினிமா பிடிக்கவில்லை. அதனால் நாடகங்களிலேயே கவனம் செலுத்தினார். ஆனாலும் 60 கள் மற்றும் 70 களில் முன்னணி நடிகராகவும் வந்தார்.
அவருக்குப் பிறகு அவரின் வாரிசுகள் பலர் தமிழ் சினிமாவில் இன்றளவும் நடித்து வருகின்றனர். அவரின் மகன்களில் ஒருவரான ராதாரவி கே பாலச்சந்தரின் மன்மத லீலை திரைப்படத்தின் மூலம் நடிகரானார். தந்தை வழியைப் பின்பற்றி குணச்சித்திரம் மற்றும் வில்லன் என அனைத்து வகையான கதாபாத்திரங்களிலும் நடித்துக் கலக்கினார். 80 களில் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த தற்போது வில்லன், குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை எனக் கலக்கி வருகிறார்.
80 கள் மற்றும் 90 களில் அவர் தொடர்ந்து ரஜினி படங்களில் வில்லனாக தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் இடையில் அவருக்கு ரஜினியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில படங்களில் ரஜினியோடு நடிக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
அதில் “அருணாசலம் படத்தை முதலில் பி வாசு இயக்குவதாக இருந்தது. அப்போது நான்தான் வில்லனாக நடிப்பதாக இருந்தது. இதை பி வாசு என்னிடம் முன்பே சொல்லியிருந்தார். ஆனால் திடீரென்று ஒரு நாள் ரஜினி என்னை அழைத்தார். நான் அவர் வீட்டுக்குப் போனேன். ரெண்டு பேரும் காலை 8 மணிக்கே சரக்கு போட்டோம்.
அப்போது அவர் ‘இப்போ அருணாசலம் படத்தின் இயக்குனராக சுந்தர் சி போட்டிருக்கோம். வில்லன்களை மூன்று பேராக்கிவிட்டோம். அதனால் நீங்கள் இருந்தால் சரியாக இருக்காது’ என்றார். ஒரு நடிகனாக எனக்கு இது அவமானமாக இருந்தது. நான் உடனே ‘தமிழ் சினிமாவில் என்ன தெரியுமா பிரச்சனை?.. இந்த திறமை (ராதாரவி), இந்த அதிர்ஷ்டத்தை (ரஜினி) தேடி வரவேண்டியதாக உள்ளது. அது முதலில் அவருக்குப் புரியவில்லை. பின்னர் புரிந்துகொண்டு சிரித்தார். அப்போதே எனக்குத் தெரிந்துவிட்டது. நம்ம ஜோலி முடிஞ்சிச்சு என்று” எனக் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி அவர்கள்…
மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள்…
ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், "அண்ணே, எனக்குக்…
சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச்…
நீட் தேர்வு முறைகேடுகள், சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய மக்கள் நல்வாழ்வு…
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இங்குள்ள ஒரு ஏழைப் பெண்ணின் மகளுக்குக்…