Categories: சினிமா

பாரதிராஜாவ எதிர்த்து ஷூட்டிங்ல பேசுற ஒரே ஆள் அவர்தான்… பிரபலம் பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

அவர் இயக்குனர் ஆனதும் முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார்.  அதுமட்டுமில்லாமல அவர்களை நட்சத்திரங்களாக உருவாக்கினார். அவர் அறிமுகப்படுத்திய ராதா, ரேவதி, ராதிகா, ரேகா உள்ளிட்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகள் என பெயரெடுத்தனர்.

16 வயதினிலே படத்தின் ஒவ்வொரு அம்சமும் ரசிகர்களைப் படம் பார்த்து திகைக்க வைக்கும் இருந்தது. பாரதிராஜாவின் அட்டகாசமான விஷுவல்கள், இளையராஜாவின் உள்ளத்தைத் தொடும் இசை, ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீதேவியின் அட்டகாசமான நடிப்பு என ஒவ்வொன்றும் மிளிர்ந்தது. இந்த படத்துக்கு முன்பு வரை கமல்ஹாசன் ஒரு சாக்லேட் பாயாக, பெண்கள் ரசித்துப் பார்க்கும் நடிகராக இருந்தார்.

அதன் பின்னரும் அவர் வசனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் விஷூவல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அதுதான் இப்போதுவரை அவருடைய ஸ்டைலாக உள்ளது. பாரதிராஜா இயக்குனராக இருந்த போது அவரை எதிர்த்து அவரின் டைரக்‌ஷன் ஸ்டைலை ஒருசிலர் மட்டுமே விமர்சனம் வைப்பார்கள். அப்படி ஒருவர்தான் அவரின் உதவி இயக்குனரும் பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன்.

ஒரு கைதியின் டைரி படத்தை பாரதிராஜா ஷூட் செய்யும்போது அவர் பாரதிராஜாவிடம் “சார் இது உங்க வழக்கமான ஸ்டைல் படம் இல்லை. மற்ற படங்களில் ஹீரொயினின் க்ளோஸ் அப் காட்சிகளைப் போட்டு அழகான ஷாட்களாகப் போட்டு எடுப்பதைப் போல இந்த படத்தில் எடுக்கமுடியாது” என விவாதிப்பாராம். இதை நடிகர் பார்த்திபன் நேரில் பார்த்து ஆச்சர்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

vinoth

Recent Posts

“சும்மா கேஷுவலா நிற்போம்…” கடைக்குள் வந்து தங்க நகையை அபேஸ் செய்த மர்ம நபர்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாகாடி சாலை, பின்னூப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி ஜூவல்ஸ் என்ற நகைக் கடையில், வாடிக்கையாளர் போல்…

2 minutes ago

செம பதிலடி..! இவ்வளவு சின்னதா இருக்கு?… “கூச்சமே இல்லாம பப்ளிக்கா பேசுறியே”… டிடிஎஃப் வாசனை வெளுத்து வாங்கிய முனியம்மா…!!

பிக் பாஸ் வீட்டில் அக்ஷிதா தனது படுக்கையில் வைத்திருந்த நாப்கினைப் பார்த்த டிடிஎஃப் வாசன், அதன் அளவைக் குறித்து அவரிடம்…

55 minutes ago

ரஜினி பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியம்… மார்ச் 27-ல் நடந்த மிகப்பெரிய டிவிஸ்ட்… மோகன் ராமன் பகிர்ந்த சுவாரஸ்யம்…!!

திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பு சிவாஜி ராவ் கெய்க்வாட்டாக இருந்தவர், நடிப்பின் மீதான தணியாத ஆர்வத்தால் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்று,…

1 மணத்தியாலம் ago

2-வது கணவரை பிரிந்தாரா தாமரை செல்வி…? இன்ஸ்டாகிராம் பெயர் மாற்றத்தால் வெடித்த சர்ச்சை… குழப்பத்தில் ரசிகர்கள்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் தனி இடம்பிடித்த நாட்டுப்புறக் கலைஞரும், நடிகையுமான தாமரைச் செல்வி தனது இரண்டாவது…

1 மணத்தியாலம் ago

ரியல் ஹீரோ பெண்..! காரில் கடத்தப்பட்ட 9 வயது சிறுவன்… சினிமா ரேஞ்சில் துரத்தி மடக்கிய வீரத்தாய்… நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!!

புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் சாலையோரம் தண்ணீர் விற்றுக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவன், அடையாளம் தெரியாத நபரால் திடீரெனக் காரில் கடத்தப்பட்டான்.…

1 மணத்தியாலம் ago

15 அடி பள்ளம்… பாய்ந்து வந்த கொடிய முதலை… கதறிய குழந்தையை காப்பாற்ற குதித்த பெண்… நடுநடுங்க வைத்த பயங்கரம்…!!

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் உயிரியல் பூங்காவில் குடும்பத்தினருடன் சென்றிருந்த மூன்று வயது சிறுவனை, கற்றல் குறைபாடு கொண்ட ஒரு நபர் திடீரென…

1 மணத்தியாலம் ago